விஜயின் மதுரை மாநாட்டிற்கு செல்ல வேண்டும் என கண்ணீருடன் புறப்பட்ட கர்ப்பிணி பெண்
மதுரையில் நடைபெறவிருக்கும் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு கர்ப்பிணி பெண் ஒருவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கண்ணீருடன் புறப்பட்ட கர்ப்பிணி
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நெருங்கி வரும் சூழ்நிலையில் பிற கட்சிகளை போலவே விஜயும் தனது கட்சியை வலுப்படுத்துகிறார்.
கட்சி தொடங்கிய பின்னர் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்த நிலையில் இன்று மதுரை தேசிய நெடுஞ்சாலை உள்ள பாரபத்தியில் இரண்டாவது மாநாடு நடைபெறவிருக்கிறது.
இந்த மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்கப்படும் என்று கூறப்படும் நிலையில் காலையில் இருந்தே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியுள்ளனர்.
கடந்த மாநாட்டை விட சிறப்பாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொண்டர்களுக்கு வழங்குதற்காக முன்கூட்டியே தண்ணீர், ஸ்நாக்ஸ் மற்றும் மருத்துவ உதவி ஆகியவை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மாநாட்டிற்கு கர்ப்பிணிகள், மாணவர்கள், முதியவர்கள் ஆகியோர்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து தனது மகனுடன் கர்ப்பிணி பெண் ஒருவர் மாநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
விஜயை பார்க்க வேண்டும் என்றும், தனக்கு ஏதும் நிகழாது என்றும் கூறி அப்பெண் கண்ணீருடன் கிளம்பியுள்ளார். இதற்கு நிர்வாகிகள் வேண்டாம் என வலியுறுத்தியும் அப்பெண் இந்த முடிவை எடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |