மயங்கிக் கிடந்த கர்ப்பிணிப்பெண்... கோமாவிலிருந்து கண் விழித்து குழந்தையைக் கண்ட நெகிழவைத்த தருணம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாழும் பெண் ஒருவர் மயங்கிக் கிடப்பதை அவரது கணவர் கண்டு உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது அவர் ஒன்பது மாத கர்ப்பிணி...
கோமாவிலிருந்த பெண்
ஜூலை மாதம் 6ஆம் திகதி, தன் மனைவியான ஜாக்கி (Jackie Miller James, 35) மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆஸ்டின் (Austin), உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
ஜாக்கியை பரிசோதித்த மருத்துவர்கள், இன்னும் சிறிது நேரம் தாமதித்திருந்தாலும், இரண்டு உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறி, உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் ஜாக்கி வயிற்றிலிருந்த குழந்தையை அகற்றி தனி மருத்துவப் பிரிவுக்கு அனுப்பியுள்ளார்கள்.
Image: Jackie Miller James/Instagram
ஜாக்கிக்கு மூளையில் இரத்தக்கசிவு முதல் பல்வேறு பிரச்சினைகள் இருப்பது தெரியவந்ததையடுத்து, அவருக்கு ஐந்து முறை மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரை மருத்துவர்கள் கோமா நிலையில் வைத்திருந்திருக்கிறார்கள்.
சகோதரி தெரிவித்துள்ள தகவல்
இந்நிலையில், தற்போது ஜாக்கி கோமாவிலிருந்து விடுபட்டுவிட்டதாக அவரது சகோதரியான நட்டாலி (Natalie) தெரிவித்துள்ளார்.
Image: Jackie Miller James/Instagram
தன் சகோதரி கோமாவிலிருந்து விடுபட்டு, முதன்முறையாக தனது குழந்தையை சந்தித்ததைக் குறித்த நெகிழ்ச்சித் தருணங்கள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார் அவர்.
இன்னும் நீண்ட காலம் ஜாக்கி புனர்வாழ்வு சிகிச்சை பெறவேண்டியுள்ளது என்றாலும், அவரை விரைவில் வீட்டுக்குக் கொண்டுவந்து அவரது மகள் மற்றும் கணவருடன் சேர்க்க உறுதிபூண்டுள்ளோம் என்கிறார் நட்டாலி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |