அதிர்ஷ்டமாக மாறிய நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் இரட்டை குழந்தைகள் பார்த்த முதல் ஐபிஎல் போட்டி! வைரல் புகைப்படம்
தன்னுடைய இரு குழந்தைகள் பார்த்த முதல் ஐபிஎல் போட்டியை மறக்க முடியாததாக மாற்றியதற்காக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தா நன்றி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் தனது இரட்டை குழந்தைகளான ஜெய் மற்றும் ஜியா ஆகியோர் பஞ்சாப் - ஆர்சிபி போட்டியை கண்டுகளிப்பது போன்ற புகைப்படத்தை நடிகையும், பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்த டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திட்டம் போட்டு சுரேஷ் ரெய்னாவை கழட்டிவிட்ட CSK அணி? போட்டுடைத்த சேவாக்
New team, new Captain and new fans ? Thank you @PunjabKingsIPL for such a fantastic run chase and for making Jai & Gia’s first IPL game so memorable ?? I cannot stop smiling. #Ting #Tataipl #ipl2022 #saddapunjab #aapajeetgaye ❤️ pic.twitter.com/vvIyMqv2Hq
— Preity G Zinta (@realpreityzinta) March 27, 2022
அந்த பதிவில், புதிய அணி, புதிய கேப்டன் மற்றும் புதிய ரசிகர்கள், நன்றி பஞ்சாப் கிங்ஸ். இவ்வளவு அருமையான ரன் சேஸிங் மற்றும் ஜெய் & ஜியாவின் முதல் ஐபிஎல் ஆட்டத்தை மறக்க முடியாததாக மாற்றியதற்காக நன்றி என பதிவிட்டுள்ளார்.
இது குறித்த ரசிகர்களின் பதிவில், இந்த இரண்டு ரசிகர்களும் (ஜெய், ஜியா) பஞ்சாப் அணிக்கு அதிர்ஷ்டமாக அமைந்துள்ளனர், முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றுள்ளது பஞ்சாப் அணி என குறிப்பிட்டுள்ளனர்.
ப்ரீத்தி மற்றும் கணவர் ஜீன் ஆகியோருக்கு கடந்தாண்டு நவம்பரில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.