விஜயகாந்த் வசனத்தோடு மகனுக்கு ஓட்டு கேட்கும் பிரேமலதா
நாங்கள் சொன்ன வாக்கில் உறுதியாக இருப்போம் என்று விஜயகாந்தின் வசனத்தை மேற்கோள் காட்டி பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
மக்களவை தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் களத்தில் தீவிரமாக செயல்படுகின்றன.
அந்தவகையில் நேற்று திருச்சியில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பிடித்துள்ளது.
தேமுதிகவிற்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய சென்னை -ப.பார்த்தசாரதி
திருவள்ளூர் (தனி) - கு.நல்லதம்பி
கடலூர் தொகுதி - சிவக்கொழுந்து
தஞ்சாவூர் தொகுதி - சிவநேசன்
விருதுநகர் தொகுதி - விஜய பிரபாகர்
விஜயகாந்தின் வசனம்
இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த், "2026 -ம் ஆண்டு தேர்தலிலும் இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும். 2 நாட்கள் வரை கூட்டணியில் இருப்போம் என்று சொன்னார்கள்.
ஆனால், சிலர் வேண்டியவை கிடைத்ததும் சென்று விட்டார்கள். நாங்கள் அப்படி இல்லை. வாக்கில் உறுதியாக இருப்போம். துளசி வாசம் மாறும்..தவசி வார்த்தை மாறாது என்று விஜயகாந்தின் வசனத்தை கூறி" பேசினார்.
மேலும், "எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லும் திமுக எதற்காக ஆட்சியில் இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று சொல்லும் திமுக, தங்கத்தின் விலையை குறைப்பேன் என வாக்குறுதி கொடுக்க தயாரா" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |