கேப்டன் எங்கேயும் போகல.. துக்கம் வேதனையோடு வந்திருக்கிறேன்: பிரேமலதா உருக்கம்
துக்கம் வேதனையோடு கூட்டணி தர்மத்திற்காக வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன் என்று பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாக பேசியுள்ளார்.
தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், அதிமுகவில் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவின் பொதுச்செயலாளர் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
பிரேமலதா பிரச்சாரம்
தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து பிரேமலதா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், "கேப்டன் விஜயகாந்த் பல திரைப்படங்களுக்காக தேனி வந்திருக்கிறார். அவரை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். அவர் எங்கேயும் போகவில்லை. தெய்வமாக நின்று வழிநடத்தி செல்கிறார்.
அவர், தனது சொந்த சம்பாத்தியத்தில் அன்னதானம் செய்தார். இன்று கேப்டன் கோயிலில் அன்னதானம் கொடுத்து வருகிறோம். கணவனை இழந்த பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்று பெண்களுக்கு தெரியும்.
அவரது இழப்பை மனதில் வைத்து துக்கத்தில் தான் 40 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன். அதில் 5 இடங்களில் தேமுதிக நிற்கிறது. விஜய பிரபாகரனுக்கு ஏன் வாக்கு சேகரிக்க செல்லவில்லை என்று பலரும் கேட்கிறார்கள்.
விஜயபிரபாகரன் மட்டும் என்னுடைய மகன் அல்ல. 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்னுடைய சகோதர சகோதரிகள்தான்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |