சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை ஜனாதிபதி - அடுத்த நகர்வு என்ன?
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 2025 ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.
இன்றைய (06) அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை உறுதிப்படுத்தினார்.
மேலும், இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் வரவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
திசாநாயக்கவின் முதல் வெளிநாட்டு விஜயம் அரச தலைவராக அண்டை நாடான இந்தியாவிற்கு இருந்தது, அங்கு அவருக்கு டிசம்பர் 16 அன்று பிரதமர் நரேந்திர மோடி சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |