பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்சுக்கு ஜனாதிபதி வாழ்த்து
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று மாபெரும் சாதனைப் படைத்த ஜோகோவிச்சுக்கு இந்திய ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வரலாறு சாதனைப் படைத்த ஜோகோவிச்சு
'கிராண்ட்ஸ்லாம்' என்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வந்தது.
இத்தொடரில் ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிக் மற்றும் நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் நேருக்குநேர் மோதினர்.
இப்போட்டியின் முடிவில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று ஜோகோவிச் மாபெரும் சாதனைப் படைத்துள்ளார்.
இதன் மூலம், ஜோகோவிச் உலகின் நம்பர் 1 வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்திய ஜனாதிபதி வாழ்த்து
இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்த ஜோகோவிச்சுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
@rashtrapatibhvn
இது குறித்து அந்த பதிவில், வாழ்த்துக்கள் @DjokerNole பிரெஞ்ச் ஓபனில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வென்றதற்காக, டென்னிஸ் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்.
சில நாட்களுக்கு முன்பு நான் மறக்க முடியாத நேரத்தை செலவழித்த செர்பியா மக்களின் சிறப்பு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.
நோவக் ஜோகோவிச் செர்பியா, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு ஒரு எழுச்சியூட்டும் சின்னமாக உள்ளார். அவர் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.
"I share the special joy of the people of Serbia with whom I got to spend memorable time a few days ago. Novak Djokovic is an inspiring icon for youth in Serbia, India and across the world. I wish him continued success," tweets President Droupadi Murmu as she congratulates Novak… https://t.co/Jy8FOKcWiJ pic.twitter.com/o6pyyghaF7
— ANI (@ANI) June 11, 2023