இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? ரணில் விக்கிரமசிங்க உட்பட 4 பேர் போட்டி!
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாசா, அனுராகுமார திசநாயக மற்றும் தல்லாஸ் அகலப்பெருமா ஆகிய நான்கு பேர் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய காரணம் எனத் தெரிவித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து தனது ஜனாதிபதி பதவியில் இருந்து கடந்த 14ம் திகதி விலகினார்.
கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து அவைத் தலைவர் மகிந்த யாபா அபய்வர்தனாவுக்கு எழுதிய ராஜினாமா கடிதம், சனிக்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் வாசிக்கப்பட்டது.
அதில் கரோனா பெருந்தொற்றும் பொதுமுடக்கமும் இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டது, அதிலிருந்து மீள்வதற்கு அனைத்துக் கட்சிகளைக் கொண்ட அரசை அமைக்க என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்.
எனது வலிமையை பயன்படுத்து என் தாய்நாட்டுக்கு சிறப்பாக சேவையாற்றினேன் என்று கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தல் வரும் 20ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதில் இலங்கையின் இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரம்சிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜனதா விமுத்தி பெரமுன கட்சியின் தலைவர் அனுராகுமார திசநாயக, மற்றும் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து வந்துள்ள தல்லாஸ் அகலப்பெருமா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய பிரதமர் வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுத்த ஜெலென்ஸ்கி: இது தான் திட்டம்
வாக்குபதிவு ஜூலை 20ம் திகதி நடைபெறயுள்ள நிலையில், அதற்கான வேட்புமனுக்கள் ஜூலை 19ம் திகதி பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.