ஜனாதிபதி இலங்கையிலேயே உள்ளார்...கருத்தை திரும்ப பெற்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் இலங்கையிலேயே இருப்பதாக அந்த நாட்டின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இவ்வாறு ஜூலை 9ம் திகதி நடைபெற்ற மக்கள் போராட்டம் பூதாகரமாக வெடித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ இல்லம் போராட்டகாரர்களால் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டது.
Speaker Mahinda Yapa Abeywardena tells BBC that President Gotabaya Rajapaksa has left the island, he is in a near by country and that he will be back in the country by Wednesday. pic.twitter.com/HfZUJw6mNB
— NewsWire ?? (@NewsWireLK) July 11, 2022
இதனை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீவில் நாட்டில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், புதன்கிழமை அவர் நாடு திரும்புவார் என்றும் பிபிசிக்கு அந்த நாட்டின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்து இருந்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: விராட் கோலிக்கு காயம்...இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலக வாய்ப்பு!
President Gotabaya Rajapaksa is still in the country and I made a mistake in the BBC interview, Speaker Mahinda Yapa Abeywardena tells an Indian news service. #DailyMirror #SriLanka #SLnews pic.twitter.com/aOxWZkCjbO
— DailyMirror (@Dailymirror_SL) July 11, 2022
இந்தநிலையில், மீண்டும் இந்திய செய்தி நிறுவனம் ஒன்றிக்கு பேட்டியளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையிலேயே இருப்பதாகவும், பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவல் தவறுதலாக தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.