கடந்த வாரத்தில் மட்டும் மூன்று முறை கொலைமுயற்சியிலிருந்து தப்பிய உக்ரைன் ஜனாதிபதி: இரகசிய தகவல் கொடுத்தது யார் தெரியுமா?
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், உக்ரைன் ஜனாதிபதியைக் கொல்வதற்கு மூன்று முறை முயற்சி நடந்ததாக திடுக்கிடவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதியான Volodymyr Zelensky, கடந்த வாரத்தில், மூன்று கொலை முயற்சி சம்பவங்களிலிருந்து தப்பியுள்ளார்.
இந்நிலையில், அப்படி உக்ரைன் ஜனாதிபதியைக் கொல்ல முயற்சி நடப்பது குறித்து உக்ரைனுக்கு தகவல் கொடுத்தவர்கள் யார் தெரியுமா?
ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு அமைப்பான Federal Security Service (FSB) என்ற அமைப்பிலுள்ள, போரை ரகசியமாக எதிர்க்கும் அதிகாரிகள்தான்!
இந்த தகவலை உக்ரைன் தேசிய பாதுகாப்புச் செயலர் உறுதி செய்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதியைக் கொல்வதற்காக இரண்டு குழுக்கள் ரஷ்யாவிலிருந்து உக்ரைனுக்கு அனுப்பட்டுள்ளார்கள். அவர்கள், உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள Wagner குழு என்ற அமைப்பைச் சேர்ந்த 400 பேர் மற்றும் செசன்யர்களான ரஷ்ய போர் வீரர்கள் ஆவர்.
இந்த செசன்ய வீரர்கள் மிகவும் கொடூரமான வகையில் கொல்லக்கூடியவர்கள் என கூறப்படுகிறது.