ஒரு நடிகராக தன் வாழ்வைத் துவங்கிய உக்ரைன் அதிபர்: பலருக்கும் தெரியாத சில உண்மைகள்
உலகின் வலிமை மிக்க நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ரஷ்யாவுக்கு எதிராக துணிச்சலாக நின்று, உங்களைப் பார்த்து நாங்கள் பயந்து ஓடிப்போய்விடவில்லை. இங்கேதான் நிற்கிறோம்.
நீங்கள் எங்களைத் தாக்கினால் எங்கள் முகத்தைத்தான் பார்ப்பீர்கள், முதுகை அல்ல என தில்லாக நின்று பேசும் உக்ரைன் அதிபர் Volodymyr Zelensky ஒன்றும் ரஷ்ய அதிபர் புடினைப்போல வாழ்நாள் அதிபர் அல்ல என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஒரு காமெடியனாக தன் வாழ்வைத் துவங்கிய Zelensky, 2015ஆம் ஆண்டு, ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். Servant of the People என்னும் அந்த தொடரில், வரலாற்று ஆசிரியராக பணி செய்து வந்த ஒருவர், உக்ரைன் அரசின் ஊழலுக்கு எதிராக வெளியிட்ட ஒரு வீடியோ வைரலாக, அதன் காரணமாக நாட்டின் அதிபராக தேற்ந்தெடுக்கப்படுவதாக அதன் கதை உருவாக்கப்பட்டிருந்தது.
அப்படி அந்த தொலைக்காட்சித் தொடரில் உக்ரைன் அதிபராக நடித்த Zelensky, அந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற, 2018ஆம் ஆண்டு, அந்த தொலைக்காட்சித் தொடரின் பெயரிலேயே Servant of the People என்ற கட்சியைத் துவங்கினார்.
உக்ரைன் அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் முடிவு செய்தபோது, பல்வேறு ஊடகங்களும் அவர் நிச்சயம் அதிபராவார் என கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.
அதேபோல, 2019ஆம் ஆண்டு, மே மாதம் 20ஆம் திகதி உக்ரைன் அதிபரானார் Zelensky. போலந்து அதிபர் முதல், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Jean Claude Juncker என பல்வேறு தலைவர்கள் Zelenskyக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
Zelenskyக்கு Olena Kiyashko என்ற மனைவியும், Oleksandra என்ற மகளும், Kyrylo என்ற மகனும் இருக்கிறார்கள். அவர்கள் இப்போது ஒரு ரகசிய இடத்தில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு காமெடியனாக, நடிகராக வாழ்க்கையைத் தொடங்கி, மிகக் குறுகிய காலத்தில் மக்கள் மனதில் ஒரு தலைவனாக இடம்பெற்று, இன்று தில்லாக ரஷ்ய அதிபருக்கே சவால் விடும் Zelenskyயைக் குறித்த விடயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருப்பதை மறுப்பதற்கில்லை.