ஜனாதிபதி டிரம்ப் ஆதரவாளர் மார்பில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: மனைவி வெளியிட்ட பகீர் பின்னணி
அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தில் தொடர்புடைய டிரம்ப் ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கியால் மார்பில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஜனவரி 6 அன்று அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் 53 வயதான கிறிஸ்டோபர் ஸ்டாண்டன் ஜார்ஜியா என்பவர். இந்த நிலையில், கடந்த வாரம் இவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் அவர்களின் வீட்டின் அடித்தளத்தில் சனிக்கிழமை காலை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் கிறிஸ்டோபர் ஸ்டாண்டனின் சடலம் அவரது மனைவியால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ள நிலையில், மருத்துவ நிபுணர்கள், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறுதி செய்துள்ளனர்.
இருப்பினும், அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தொடர்பில் அதிகாரிகள் தகவல் வெளியிட மறுத்துள்ளனர். மட்டுமின்றி, தற்கொலை செய்து கொண்ட கிறிஸ்டோபர் ஸ்டாண்டனின் குடியிருப்பில் இருந்து இரண்டு துப்பாக்கிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஸ்டாண்டன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 1000 டொலர் அபராதம் அல்லது 180 நாட்கள் சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம் என்றே கூறப்பட்டது.
ஜனவரி 6 ம் திகதி டிரம்ப் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்ட நாடாளுமன்ற முற்றுகை மற்றும் கலவரத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
