போராலும் பிரிக்க முடியாது... கணவர் தொடர்பில் ஜெலென்ஸ்கி மனைவி உருக்கம்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் முதன் முறையாக தமது கணவருடன் இணைந்துள்ளார் ஜெலென்ஸ்கியின் மனைவி ஒலேனா.
உக்ரைன் மீது படையெடுப்பு தொடங்கிய நாள், பாதுகாப்பு கருதி ஒலேனா மற்றும் அவரது இரு பிள்ளைகளுடன் இடம் மாற்றப்பட்டார்.
உக்ரைனில் அடையாளம் காணமுடியாத பகுதியில் ஒலேனா மற்றும் பிள்ளைகள் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு பின்னர் ஒலேனா தமது கணவரை நேரில் சந்தித்துள்ளார்.
இந்த நிலையில், தனது உறுதியான தலைமை மற்றும் ரஷ்யாவிற்கு வலிமையான எதிர்ப்பால் உலக நாடுகளின் கவனத்தை ஜெலென்ஸ்கி ஈர்த்ததில் தாம் ஆச்சரியப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தம்மிடம் இருந்து எவராலும் தமது கணவரை பிரிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், போராலும் கூட என்றார். போர் தொடங்கிய நாளில் இருந்து ஜெலென்ஸ்கி மாறிவிட்டார் என கூற முடியாது என தெரிவித்துள்ள ஒலேனா, கொள்கை அளவில் தமது கணவர் எப்போதும் மாறாதவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
@AP