பிரித்தானியாவில் தீவிபத்தில் சிக்கிய 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி திடீர் மரணம்!
பிரித்தானியாவில் கடந்த வெள்ளிக்கிழமை வீடு ஒன்றில் தீப்பிடித்ததில் படுகாயம் அடைந்த இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தனர்.
இங்கிலாந்தில், லங்காஷயர் கவுன்டியில் பிரஸ்டனில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் கொரோனேஷன் கிரசென்ட்டில் உள்ள ஒரு வீட்டில் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டன.
கட்டிடத்தில் 20 வயதுகளில் உள்ள பெண் மற்றும் அவரது 3 வயது பெண் மற்றும் 5 வயது ஆன் குழந்தை ஆகிய 3 பேர் பயங்கரமான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், குழந்தைகள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். அதேசமயம், அவர்களது தாய்க்கு ஏற்பட்டுள்ள காயங்கள் உயிருக்கு ஆபத்தாக இல்லை என தெரிவிக்கப்பட்டது.
தீவிபத்து மற்றும் குழந்தைகளின் மரணம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் வீட்டிற்கு தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் தெரிவித்துள்ளனர், ஆனால் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார்.