T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு
Lhuan dre pretorius hits 188 runs breaks gayle t20 record: T20 போட்டியில் 188 ஓட்டங்கள் குவித்துள்ள பிரிட்டோரியஸ், கிறிஸ் கெயிலின் 13 வருட சாதனை முறியடித்துள்ளார்.
188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற CSA T20 சேலஞ்ச் போட்டியில், ப்ளூம்ஃபோன்டெய்னில் டைட்டன்ஸ் மற்றும் நைட்ஸ் அணிகள் மோதியது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 267 ஓட்டங்கள் குவித்தது.
நைட்ஸ் அணி 17.2 ஓவர்களில்., 143 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், டைட்டன்ஸ் அணி 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில், டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், ஆட்டமிழக்காமல் 79 பந்துகளில் 13 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் உட்பட 188 ஓட்டங்கள் விளாசினார்.
இதன் மூலம், ஒரு T20 போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார் பிரிட்டோரியஸ்.
முன்னதாக 2013 ஐபிஎல் தொடரில் RCB அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில், புனே வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் 175 ஓட்டங்கள் குவித்ததே T20 போட்டியில் தனிநபர் குவித்த அதிகபட்ச ஓட்டமாக இருந்தது.

தற்போது பிரிட்டோரியஸ், கிறிஸ் கெயிலின் 13 வருட சாதனையை முறியடித்துள்ளார்.
20 வயதான பிரிட்டோரியஸ் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 1 டெஸ்ட், 3 ODI மற்றும் 13 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.