பிரித்தானியாவில் இதன் விலை இன்று மாலை 6 மணியுடன் அதிகரிக்கும்... உறுதி செய்த அரசாங்க அறிக்கை
பிரித்தானியாவில் இன்று மாலை 6 மணி முதல் சிகரெட் பொதி ஒன்றின் விலையில் குறைந்தபட்சம் 29p உயரும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
சாரதிகளுக்கு பெரும் நிம்மதி
பிரித்தானிய நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரி உயர்வுகள், நலத்திட்டங்கள் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் தொடர்பான பல திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
@pa
தனிப்பட்ட வருமான வரி குறைக்கப்படுவதால், பிரித்தானிய நர்ஸுகள் 500 பவுண்டுகள் வரையில் சேமிக்க முடியும். சாரதிகளுக்கு பெரும் நிம்மதியளிக்கும் வகையில் எரிபொருள் வரி உயர்வு இல்லை.
ஆனால் புதிய விதிகளின் அடிப்படையில் அரசு உதவிகளை மட்டுமே நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான இளையோர்களுக்கு பேரிடி காத்திருக்கிறது. மேலும், மில்லியன் கணக்கான யுனிவர்சல் கிரெடிட் பயனர்களுக்கு 470 பவுண்டுகள் ஊக்கத்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை 6 மணி முதல் சிகரெட் புகைப்பவர்கள் அதிக கட்டணம் செலுத்த நேரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிகரெட் பொதி ஒன்றின் விலையில் குறைந்தபட்சம் 29p உயரும் என்றே கூறப்படுகிறது.
கையால் சுருட்டும் புகையிலை
20 எண்ணிக்கை கொண்ட சிகரெட் பொதி ஒன்றின் சராசரி விலை அக்டோபர் மாதம் 14.59 பவுண்டுகள் என இருந்தது. தற்போது இந்த விலையில் 29p உயரும் என்றே கூறப்படுகிறது.
Credit: iStock
அத்துடன் இன்னொரு அதிர்ச்சி தகவலாக கையால் சுருட்டும் புகையிலையின் விலை அதே சில்லறை விலைக் குறியீடு விகிதத்துடன் 12% அதிகரிக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விலை உயர்வு புகை பிடிப்பவர்களை ஏழ்மை நிலைக்கு தள்ளும் என்றும் அல்லது சட்டவிரோத குழுக்களிடம் இருந்து தரமற்ற பொருட்களை வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.
கைகளால் சுருட்டும் புகையிலை என்பது மிகவும் மலிவானதாக இருந்துள்ளது, மட்டுமின்றி இளையோர்கள் புகைக்கும் சிகரெட்டுகளுக்கு வரி விதிக்காமல், கைகளால் சுருட்டும் புகையிலைக்கு அதிக வரி விதித்திருப்பதன் நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புகையிலை வரி என்பது இங்கிலாந்தில் சிகரெட் தயாரிக்கும் அல்லது இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரி. வரி உயர்த்தப்பட்டால், கடைகளில் புகையிலை பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு நுகர்வோர் தள்ளப்படுவார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |