5,000 வெளிநாட்டு சாரதிகளுக்கு அவசரமாக விசா வழங்கும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்: ஆனால்...

Boris Johnson British Visa
By Balamanuvelan Sep 25, 2021 10:20 AM GMT
Report

பிரித்தானியாவின் பல பகுதிகளில் பெட்ரோல் நிலையங்கள் முன் எரிபொருள் நிரப்ப வாகனங்கள் குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பிரித்தானியாவே பரபரப்படைந்துள்ளது.

நிலைமை சீரடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், பதற்றம் வேண்டாம் என்ற அரசின் கோரிக்கையை மக்கள் காதில் வாங்கியதுபோல் தெரியவில்லை. ஆகவே, பெட்ரோல் நிலையங்கள் முன் கோபத்துடன் இன்னமும் நீண்ட வரிசையில் மக்கள் தங்கள் வாகனங்களுடன் நிற்கிறார்கள்.

கடந்த கால நிகழ்வுகள் நினைவுக்கு வந்ததால், எரிபொருள் பற்றாக்குறையால் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்துடன் அவர்கள் பெட்ரோல் நிலையங்கள் முன் குவிந்துள்ளதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் காரணம், கனரக வாகன ஓட்டிகள் பற்றாக்குறை. இன்னொரு வகையில் கூறினால் பிரெக்சிட் என்றும் கூறலாம்.

5,000 வெளிநாட்டு சாரதிகளுக்கு அவசரமாக விசா வழங்கும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்: ஆனால்... | Prime Minister Has Issued An Urgent Visa

பிரபலமான ஒரு கதை உண்டு. அதில் ஒருவர் மரத்தின் கிளை ஒன்றில் உட்கார்ந்துகொண்டு, தான் உட்கார்ந்திருக்கிற கிளையையே வெட்டிக்கொண்டிருப்பார். கடைசியில், அந்த கிளையுடன், அவரும் கீழே விழுவார்.

பிரெக்சிட்டும் அப்படித்தான் ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தேவையில்லாமல் பெரும் தொகையை வழங்குகிறோம் என்று எண்ணி, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியது பிரித்தானியா. ஆனால், அதைத் தொடர்ந்து பிரித்தானியா சந்தித்துவரும் பிரச்சினைகள் ஏராளம்.

பிரித்தானிய கடல் பகுதியில் பிரான்ஸ் மீன் பிடிக்கக்கூடாது என்றது பிரித்தானியா. பதிலுக்கு உங்கள் மீனை நாங்கள் வாங்கமாட்டோம் என்றன ஐரோப்பிய ஒன்றிய நாடுகள். பிரான்சின் கலாயிஸ் துறைமுகம் வழியாக பிரித்தானியாவுக்கு உள்ளே செல்லவும், வெளியேறவும் பிரச்சினை ஏற்பட்டது. கால தாமதமானது. லொறி சாரதிகள் கடும் பிரச்சினைகளை சந்தித்தார்கள்.

5,000 வெளிநாட்டு சாரதிகளுக்கு அவசரமாக விசா வழங்கும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்: ஆனால்... | Prime Minister Has Issued An Urgent Visa

கடைசியில், இந்த தொல்லை எல்லாம் எதற்கு, நம் சொந்த நாட்டுக்குத் திரும்பிவிடுவோம் என பல ஐரோப்பிய ஒன்றிய லொறி சாரதிகள் வேலையை விட்டு விட்டு போய்விட்டார்கள். அத்துடன் கொரோனா கட்டுப்பாடுகளும் சேர்ந்துகொள்ள, அப்படி போனவர்களில் சுமார் 100,000 கனரக வாகன சாரதிகளும் அடக்கம்.

கனரக வாகனங்களை ஓட்ட சாரதிகள் இல்லாததால் உணவு முதல் எரிபொருள் வரை அத்தியாவசிய பொருட்களை பிரித்தானியாவுக்குக் கொண்டு வர வாகனங்கள் போதவில்லை.

ஆக, கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தானியாவில் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்தது. இறக்குமதி செய்யப்படும் சில குறிப்பிட்ட உணவுகளில் தட்டுப்பாடு தொடங்கி, தற்போது எரிபொருள் தட்டுப்பாட்டில் வந்து நிற்கிறது.

5,000 வெளிநாட்டு சாரதிகளுக்கு அவசரமாக விசா வழங்கும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்: ஆனால்... | Prime Minister Has Issued An Urgent Visa

பிரித்தானியாவில் வாழும் நடுத்தர வயதுடையோர் மற்றும் முதியவர்களுக்கு வரலாறு நன்றாக தெரியும். ஏற்கனவே இரண்டு முறை, அதாவது, 1973 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பிரித்தானியாவில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் 1978இல் வாகன ஓட்டிகள் முதலானோர் நடத்திய வேலை நிறுத்தத்தால் ஏற்பட்ட எரிபொருள் விலையுயர்வு, உணவுப்பற்றாக்குறையை ஏற்படுத்தியதோடு, எரிபொருளை ரேஷன் முறையில் வழங்கும் ஒரு நிலையும் உருவானது. ஆகவே, அதே போன்ற ஒரு நிலைமை மீண்டும் உருவாகிவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.

இந்நிலையில், இதுவரை அகதிகளை வன்கரம் கொண்டு கட்டுப்படுத்தவேண்டும் என கடும் முயற்சிகள் மேற்கொண்ட பிரித்தானியா, இப்போது அவசர அவசரமாக வெளிநாட்டு கனரக வாகன ஓட்டிகளுக்கு தற்காலிக விசாக்கள் வழங்க திட்டமிட்டுள்ளது.

சுமார் 5,000 வெளிநாட்டு ட்ரக் சாரதிகளுக்கு தற்காலிக விசா வழங்கி, அவர்கள் உதவியுடன் இந்த தட்டுப்பாடுகளை தீர்க்க பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிடுகிறார்.

5,000 வெளிநாட்டு சாரதிகளுக்கு அவசரமாக விசா வழங்கும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்: ஆனால்... | Prime Minister Has Issued An Urgent Visa

விடயம் என்னவென்றால், தற்போது பிரித்தானியாவில் சுமார் 100,000 ட்ரக் சாரதிகள் பற்றாக்குறை உள்ளது. போரிஸ் 5,000 அல்ல 10,000 விசாக்கள் வழங்கினாலும், மீதமுள்ள 90,000 வெற்றிடங்களை எப்படி நிரப்ப முடியும்?

ஆக, இராணுவ வீரர்களையும் ட்ரக் சாரதிகளாக களமிறக்கும் ஒரு திட்டமும் உள்ளது.

ஆனாலும், அதற்குள் பிரச்சினைகள் தொடங்கிவிட்டன. நேற்று பள்ளிகளுக்குச் சென்று பிள்ளைகளை அழைத்து வரச் சென்ற பெற்றோரும், முதியோரும், வர்த்தகர்களுமாக பெட்ரோலுக்காக பெட்ரோல் நிலையங்கள் முன் குவிய, சாலைகள் ஸ்தம்பித்துப்போயின.

இன்னொரு பக்கம் மக்கள் பயந்ததுபோலவே, குளிரூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் வந்து சேராததால் சில பல்பொருள் அங்காடிகளில் உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது. அடுத்து என்னவாகும் என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!  

5,000 வெளிநாட்டு சாரதிகளுக்கு அவசரமாக விசா வழங்கும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்: ஆனால்... | Prime Minister Has Issued An Urgent Visa

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US