ஜன்னலுக்கு வெளியே எட்டித்தள்ளி காதலியை படுகொலை செய்த பிரதமரின் மகன்: ரஷ்யாவில் பயங்கரம்
உளவாளிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் முன்னணி ரஷ்ய பல்கலைக்கழகத்தில் நான்காவது மாடியின் ஜன்னலுக்கு வெளியே தனது காதலியைத் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார் பிரதமரின் மகன்.
குறித்த வழக்கு விசாரணையில் 26 வயதான Murtuz Medzhidov என்பவர் 21 வயதான தமது காதலி Tomiris Baysafa என்பவரை 40 அடி உயரத்தில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளது நிரூபணமாகியுள்ளது.
இதனையடுத்து அவருக்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்ட சிறைச்சாலையில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 2018ல் நடந்துள்ளது.
இருவரும் மாஸ்கோவில் அமைந்துள்ள பிரபலமான உளவாளிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் முன்னணி ரஷ்ய பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளனர்.
சம்பவத்தில் 21 வயதான Tomiris Baysafa பல்கலைக்கழகத்தில் 40 அடி உயரத்தில் இருந்து வீழ்ச்சியைத் தொடர்ந்து பல எலும்பு முறிவுகளுக்கு ஆளானார். ஆனால், காயங்கள் காரணமாக மாணவி Tomiris Baysafa மரணமடைந்த சில வாரங்களுக்கு பின்னரே பொலிசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
தொடர்ந்து, இந்த விவகாரத்தில் Medzhidov குற்றவாளி அல்ல என விடுவிக்கப்பட்ட நிலையில், மாணவி Tomiris Baysafa-வின் தாயார் முன்னெடுத்த போராட்டங்களுக்கு தற்போது உரிய தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தாகெஸ்தான் பிராந்தியத்தின் பிரதமரான Mukhtar Medzhidov என்பவரின் மகனே தொடர்புடைய கொலை வழக்கில் சிக்கியவர். இதனால் விசாரணையில் துவக்க கட்டத்தில் பிரதமரின் மகனுக்கு சாதகமாகவே அதிகாரிகள் தரப்பு நடந்துகொண்டுள்ளது.
ஆனால் Tomiris Baysafa-வின் தாயார் தமது மகளுக்கு நீதி கிடைக்க கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தார். மேலும், ரஷ்யா மற்றும் தனது தாயகமான கஜகஸ்தானின் ஜனாதிபதிகளுக்கு நீதி கோரி அவர் முறையிட்டார்.
இதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட ரகசிய மறுவிசாரணையில் நடுவர் நீதிமன்றம் ஒருமனதாக Medzhidovவை கொலைக் குற்றவாளி எனக் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.