அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள்
* தனக்கும், தன்னுடைய மனைவிக்கும் பல வித்தியாசங்கள் இருந்ததாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் பிரதமர் வேட்பாளரான ரிஷி சுனக்.
* என் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடிந்ததால் நான் அதிர்ஷ்டசாலி எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் வேட்பாளரான ரிஷி சுனக், தன் மனைவி, பிள்ளைகள் குறித்து பிரித்தானிய ஊடகம் ஒன்றிற்கு மனம் திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
The Sunday Times பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், தனது திருமண வாழ்வு மற்றும் பிள்ளைகள் குறித்த சில விடயங்களை வெளிப்படையாக தெரிவித்தார்.
42 வயதாகும் ரிஷி, இன்ஃபோசிஸ் நிறுவனரான நாராயன மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தியை அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் சந்தித்தார்.
அப்போது தங்கள் இருவருக்கும் பல வித்தியாசங்கள் இருந்ததாக தெரிவிக்கிறார் ரிஷி. நான் எப்போதும் எல்லாவாற்றையும் மிகவும் நேர்த்தியாக அடுக்கி வைத்திருப்பேன், அக்ஷதாவோ எனக்கு நேர் எதிர், அந்த விடயத்தில் அவள் பயங்கரமானவள்.
நான் இதைச் சொல்வது கண்டிப்பாக என் மனைவிக்குப் பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனால், நான் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன், பொருட்களை நேர்த்தியாக அடுக்கி வைப்பதில் அவள் ரொம்ப மோசம். அவளுடைய அறை முழுவதும் துணிகளும் ஷூக்களுமாக கிடக்கும் என்கிறார் ரிஷி.
Image - newsleaflets
ரிஷி Stanford பல்கலைக்கழகத்தில் MBA படிக்கும்போது அவரும் அக்ஷதாவும் சந்தித்திருக்கிறார்கள். 2006ஆம் ஆண்டு இந்தியாவின் பெங்களூருவில் குடும்பத்தார் சூழ திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள் இருவரும்.
தன் பிள்ளைகளான கிரிஷ்னா (11) மற்றும் அனௌஷ்கா (9) குறித்தும் பேசிய ரிஷி, என் பிள்ளைகள் பிறக்கும்போது நான் சொந்தத் தொழில் செய்துகொண்டிருந்ததால் அவர்களுடன் என்னால் அதிக நேரம் செலவிட முடிந்தது, அந்த விடயத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்கிறார்.
Photo: zeenews
தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும்போதெல்லாம் எங்கே ஒரு குழந்தையைப் பார்த்தாலும் என்னையறியாமல் அந்தக் குழந்தையைத் தூக்குவதற்காக அதை நோக்கி என் கைகள் நீளும், என்று ரிஷி கூறுவதிலிருந்து அவருக்கு பிள்ளைகள் என்றால் எவ்வளவு பிரியம் என்பது புரிகிறது.
ரிஷி பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவாரா இல்லையா என்பது, அடுத்த மாதம், அதாவது செப்டம்பர் 5ஆம் திகதி தெரியவரும்.
Photo - thetimes