இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள் பறிப்பு: முன்னாள் மனைவி சாரா பெர்குசனுக்கு மாற்றப்பட்ட பட்டம்
இளவரசர் ஆண்ட்ரூ வின் அரச பதவி நீக்கத்துக்கு பிறகு அவரது முன்னாள் மனைவி சாரா பெர்குசனின் பட்டத்திலும் மாற்றம் ஏற்பட உள்ளது.
பதவி நீக்கப்பட்ட இளவரசர் ஆண்ட்ரூ
பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம், சீனா உடனான தொடர்பு போன்ற விவகாரங்களால் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிகளை தொடர்ந்து பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ வின் பட்டங்கள் மற்றும் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது.
பட்டங்கள் மற்றும் பதவிகள் அனைத்தையும் இளவரசர் ஆண்ட்ரூ தாமாகவே முன்வந்து கைவிட ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் ஆர்டர் ஆஃப் தி கார்டர் உட்பட தனது அனைத்து பட்டங்களையும் இளவரசர் ஆண்ட்ரூ கைவிட்டுள்ளார்.
இளவரசர் ஆண்ட்ரூ வின் இந்த முடிவை பிரித்தானிய மன்னர் சார்லஸ் வரவேற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சாரா பெர்குசனின் நிலை
இளவரசர் ஆண்ட்ரூ இந்த நிலைமை அவரது முன்னாள் மனைவி சாரா பெர்குசனின் பட்டங்கள் நிலை குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
சமீபத்திய தகவலின் படி, இளவரசர் ஆண்ட்ரூ தனது பட்டங்களை துறந்ததன் விளைவாக அவரது முன்னாள் மனைவி மற்றும் யார்க் டச்சஸ் (Duchess of York) என அழைக்கப்படும் சாரா பெர்குசனும் தன்னுடைய பட்டங்களை துறக்க உள்ளார்.
தி டெலிகிராஃப் வெளியிட்ட செய்தியில், முன்னாள் யார்க் டச்சஸ் அதிகாரப்பூர்வமாகும் வரை சாரா பெர்குசன் என்று மட்டுமே அழைக்கப்படுவார் என தெரிவித்துள்ளது.
எப்ஸ்டீன் உடனான சாரா பெர்குசனின் தொடர்பு வெளிவந்ததை தொடர்ந்து யார்க் டச்சஸ் பொதுமக்களின் விமர்சனங்களை எதிர் கொண்டதுடன் பல தொண்டு நிறுவனங்களில் இருந்தும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |