விரைவில் மன்னரை சந்திக்கும் இளவரசர் ஹரி: மன்னரின் ஒரே ஒரு நிபந்தனை
விளையாட்டுப் போட்டி ஒன்றிற்காக இளவரசர் ஹரி ஐரோப்பா வரும் நிலையில், அவர் தன் தந்தை சார்லசை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மன்னரை சந்திக்கும் ஹரி
இளவரசர் ஹரி, ஜேர்மனியில் நடைபெறும் Invictus Games என்னும் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஐரோப்பா வருகிறார்.
Image: Getty Images
போட்டிகள் முடிந்து அமெரிக்கா திரும்பும் ஹரி, பிரித்தானியா வழியாக அமெரிக்கா திரும்ப இருக்கிறார். அப்போது ஹரியும் மன்னர் சார்லசும் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே ஒரு நிபந்தனை
அப்படி இளவரசர் ஹரி மன்னர் சார்லசை சந்திக்கும் நிலையில், மன்னர் அவருக்கு ஒரே ஒரு நிபந்தனை விதிக்க உள்ளாராம்.
அது என்னவென்றால், இனி கண்டிப்பாக குடும்பத்தின் தனிப்பட்ட விடயங்களை பொது இடங்களில் பேசக்கூடாது என்பதுதானாம்.
Image: AP
இன்னொரு முக்கிய விடயம், ஹரி மட்டுமே பிரித்தானியா வருவார் என்றும், மேகன் அவருடன் வரமாட்டார் என்றும் அரண்மனை வட்டாரத்துக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |