ஹரி மேகன் தம்பதியர் குறித்து ஜேர்மனியில் வெளியாகியுள்ள ஆவணப்படம்: மனவேதனை அடைந்துள்ளதாக தகவல்
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவியான மேகன் குறித்த ஆவணப்படம் ஒன்று கடந்த வாரம் ஜேர்மனியில் வெளியான நிலையில், அது அவர்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜேர்மனியில் வெளியான ஆவணப்படம்
கடந்த வாரம், ஜேர்மனியில் இளவரசர் ஹரியைக் குறித்த,’Harry - The Lost Prince’ என்னும் ஆவணப்படம் ஒன்று வெளியானது.
அந்த ஆவணப்படத்தில், தம்பதியர் வாழும் கலிபோர்னியாவிலுள்ள Montecito என்னுமிடத்தில், அவர்களுடைய அக்கம் பக்கத்தவர்கள் ஹரியையும் மேகனையும் விமர்சித்துள்ளது முதல், அவர்களுடைய தொண்டு நிறுவனம், ஹரியின் ஸ்பேர் புத்தகத்தில் அவர் குறிப்பிட்ட சில விடயங்கள் என பல கருத்துக்கள் விமர்சிக்கப்பட்டுள்ளன.
மேகன் தன் வீட்டை விட்டு வெளியேயே வருவதில்லை என்றும், சமுதாயத்துக்கு எந்த பங்களிப்பும் செய்வதில்லை என்றும் அவரது அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் விமர்சித்துள்ளார்கள்.
அத்துடன், தம்பதியரின் ஆர்ச்வெல் தொண்டு நிறுவனத்துக்கு 2021இல் 13 மில்லியன் டொலர்கள் நன்கொடை கிடைத்த நிலையில், 2022இல் அது 2 மில்லியன் டொலர்களாக குறைந்தது குறித்த விடயமும் அந்த ஆவணப்படத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹரி தனது ராணுவ சேவையின்போது நடந்த விடயங்களை தனது ஸ்பேர் புத்தகத்தில் வெளியிட்டது குறித்த விமர்சனமும், தம்பதியரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விமர்சனமும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அந்த ஆவணப்படம் ஹரி மேகன் தம்பதியருக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள தம்பதியருக்கு நெருக்கமான ஒருவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்ததை வைத்தே இன்னமும் தங்களை மற்றவர்கள் எடைபோடுவதாக அவர்கள் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த காலத்தில் நிகழ்ந்த விடயங்களின் தாக்கத்திலிருந்து தப்பமுடியவில்லையே என அவர்கள் வருந்துவதாகவும், இவையெல்லாம் நிறுத்தப்படவேண்டுமென ஹரி மேகன் தம்பதியர் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |