மேகனை விமர்சித்தவருடன் தன் தங்கை சிரித்தபடி நிற்கும் காட்சிகளைக் கண்டு ஹரி கடும் கோபம்
பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது சகோதரிகளும் எவ்வளவு நெருக்கம் என்பது பிரித்தானியா நன்கறிந்த விடயம்.
ஆனால், தன் சகோதரி, தன் மனைவியை மோசமாக விமர்சித்த ஒருவரை அணைத்தபடி இருக்கும் புகைப்படங்களைக் கண்டு ஹரி கடுங்கோபம் அடைந்துள்ளாராம்!
மேகனை மோசமாக விமர்சித்தவர்
பிரபல பிரித்தானிய ஊடகவியலாளரான பையர்ஸ் மார்கன், ஹரி மேகனை திருமணம் செய்த புதிதில் அவருக்கு ஆதரவாக பேசி வந்தார்.
ஆனால், ஒரு கட்டத்தில் மேகன் மார்கனை அலட்சியப்படுத்தியதாக தெரிகிறது. அதிலிருந்து மேகனுக்கு எதிரியாகவே மாறிவிட்டார் மார்கன்.
குட் மார்னிங் பிரிட்டன் என்னும் நிகழ்ச்சியை வழங்கிவந்த மார்கனிடம், மற்றொரு ஊடகவியலாளர் மார்கன் மேகனை கடுமையாக விமர்சிப்பதாக கூற, விவாதத்தின் ஒரு கட்டத்தில் மார்கன் கோபத்தில் எழுந்து வெளியே சென்றுவிட்டார்.
பின்னர் அந்த தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்தே வெளியேறிவிட்டார் மார்கன்.
ஹரி கடுங்கோபம்
இந்நிலையில், தனக்கு நெருக்கமான தனது சித்தப்பா பிள்ளையான இளவரசி யூஜீனி, பையர்ஸ் மார்கனை அணைத்தபடி, அவருடன் சிரித்தபடி இருக்கும் காட்சிகளை ஹரி கண்டுள்ளார்.
தன் மனைவியை மோசமாக விமர்சிக்கும் ஒருவரை, தன் தங்கை அணைத்தபடி, அவருடன் சேர்ந்து சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் ஹரியை கொந்தளிக்கச் செய்துவிட்டனவாம்.
இந்த விடயத்தை மார்கனும் உறுதி செய்துள்ளார். ஹரிக்கும் யூஜீனிக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்று கூறியுள்ள மார்கன், அதற்குக் காரணம் நான்தான் என்று கூறியுள்ளார்.
லண்டனிலுள்ள Notting Hill gastropub என்னும் பிரபல விடுதிக்கு தான் சென்றிருந்தபோது, தான் யூஜீனியை சந்தித்ததாகவும், தனக்கு விடைகொடுப்பதற்காக தன்னை யூஜீனி கட்டியணைத்த காட்சிகள் வெளியானதாகவும், அதனால் ஹரி கடும் கோபமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார் மார்கன்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |