தண்டிக்கப்பட்ட குற்றவாளி இளவரசர் ஹரி- மேகன் தம்பதியின் மெய்க்காப்பாளரா? அவரது பகீர் பின்னணி
தண்டிக்கப்பட்ட நபரே தற்போது இளவரசர் ஹரி- மேகன் தம்பதியுடன் Frogmore மாளிகையில் காணப்பட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரியான பெரே டாப்ரி தமது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றவர்
இளவரசர் ஹரி- மேகன் தம்பதியின் மெய்க்காப்பாளர் தொடர்பில் வெளியான புகைப்படம் தற்போது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் தொடர்பிலும், அவரது பின்னணியும் சமூக ஊடகங்களில் அலசப்பட்டு வருகிறது. 51 வயதாகும் Pere Daobry என்பவரே ஹரி- மேகன் தம்பதியின் புதிய மெய்க்காப்பாளர் என தெரியவந்துள்ளது.
@mega
முன்னாள் பெருநகர காவல்துறை அதிகாரியான பெரே டாப்ரி தமது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றவர் என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டவர்.
மேலும், சம்பவத்தின் போது, சமயோசிதமாக 999 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் மட்டுமே, சிறை தண்டனையில் இருந்து அவர் தப்பியதாக கூறப்படுகிறது.
குறித்த தண்டிக்கப்பட்ட நபரே தற்போது இளவரசர் ஹரி- மேகன் தம்பதியுடன் Frogmore மாளிகையில் காணப்பட்டுள்ளார். செப்டம்பர் 2016ல் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட நிலையில், பெரே டாப்ரியின் மனைவி சாரா ஜே, அவரும் பொலிஸ் அதிகாரியே, பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.
@ollie dixon
இப்படியான ஒரு நபர் ஹரி- மேகன் தம்பதியின் மெய்க்காப்பாளராக வலம் வரும் நிலையில், இனிமேலும் பெண்கள் உரிமைகள் - குறிப்பாக பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக மேகன் மெர்க்கல் குரல் எழுப்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இளவரசர் ஹரி- மேகன் தம்பதி கண்டிப்பாக பெரே டாப்ரியின் பின்னணி தெரிந்திருக்கும் எனவும், இல்லாமல் அவர்கள் தங்கள் மெய்க்காப்பாளராக ஒருவரை பணியமர்த்த வாய்ப்பில்லை எனவும் பல தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
@PA