இளவரசர் ஹரி-நெட்ஃபிக்ஸ் இடையே மோதல்! ஆவணப்படத்தை வெளியிடுவதில் குழப்பம்
ஆவணப்பட வெளியீட்டு திகதி தொடர்பாக இளவரசர் ஹரி நெட்ஃபிக்ஸ் இடையே மோதல்.
ஜனவரி 10-ஆம் திகதி ஹரியின் நினைவுக் குறிப்பு புத்தகமான 'Spare' வெளியாகவுள்ளது.
இளவரசர் ஹரி தனது வரவிருக்கும் ஆவணப்படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பாக நெட்ஃபிக்ஸ் நிறுவனத்துடன் மோதுவதாக கூறப்படுகிறது.
செப்டம்பரில் ராணி எலிசபெத் காலமானபோது இளவரசர் ஹரி இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பின் நடுவில் இருந்தார். 113 மில்லியன் பவுண்டுகளுக்கு விலை பேசப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்திற்காக ஹரி ஏற்கெனவே 35 மில்லியன் பவுண்டு முன்தொகையாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சர்ச்சைக்குரிய அரச குடும்ப தம்பதியான இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலைப் பற்றிய இந்த ஆவணத் தொடர் இந்த டிசம்பரில் வெளிவர திட்டமிடப்பட்டது.
திட்டமிட்டதைப் போல், நெட்ஃபிக்ஸ் இந்த ஆவணத் தொடரை அடுத்த மாதம் வெளியிட விரும்புகிறது. ஆனால், இளவரசர் ஹரிக்கு இதில் விருப்பமில்லை என்பதால், நெட்ஃபிக்ஸ் நிறுவனத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இளவரசர் ஹரி ஆவணத் தொடரை கிறிஸ்துமஸ் முடிவடையும் வரை தாமதப்படுத்த விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 10-ஆம் திகதி அவருடைய நினைவுக் குறிப்பு புத்தகமான 'Spare' வெளியாகவுள்ள நிலையில், அதே சமயத்தில் தொடரும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதை ஹரி விரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெரைட்டி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் போது இந்தத் தொடரைப் பற்றி மேகன் மார்க்கல் பேசிய பிறகு இந்த தகவல் கசிந்துள்ளது.
அந்த பேட்டியில், இந்த ஆவணத்தொடர் ஒரு காதல் கதை என்றும் ரொமான்டிக்-காமெடியாக இருக்கும் என்றும் விவரித்தது குறிப்பிடத்தக்கது.