பிரித்தானியா வரும் இளவரசர் ஹரி... மன்னர் மகனை சந்திப்பாரா?
இளவரசர் ஹரி தான் உருவாக்கிய இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளுக்காக பிரித்தானியா வர இருக்கிறார்.
இந்நிலையில், விளையாட்டுப் போட்டிகளில் முக்கியப் பங்கேற்க அவர் தனது தந்தையான பிரித்தானிய மன்னர் சார்லசுக்கு அழைப்பு விடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா வரும் இளவரசர் ஹரி...
2027ஆம் ஆண்டுக்கான இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகள், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை, இங்கிலாந்தின் பர்மிங்காமிலுள்ள தேசிய கண்காட்சி மையத்தில் நடைபெற உள்ளன.

இன்விக்டஸ் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இளவரசர் ஹரி பிரித்தானியா வர உள்ளதுடன், போட்டி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் ராஜகுடும்ப உறுப்பினர்களுக்கு அழைப்பும் விடுக்க இருக்கிறார்கள்.
மன்னர் கலந்துகொள்வாரா?
இந்நிலையில், மன்னர் சார்லஸ் இன்விக்டஸ் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வாரா என்பது குறித்து ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மன்னர் சார்லஸ் இன்விக்டஸ் போட்டிகளில் கலந்துகொள்ளமாட்டார் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் ராஜ குடும்ப நிபுணரான மாட் வில்கின்சன் என்பவர்.
அத்துடன், ராணி கமீலாவோ, இளவரசர் வில்லியமோ கூட இன்விக்டஸ் போட்டிகளில் கலந்துகொள்ளமாட்டார்கள் என்கிறார் அவர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மன்னரின் மனைவியான ராணி கமீலா, 2027ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி, தன் 80ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார்.
அன்றுதான் இன்விக்டஸ் போட்டிகளில் நிறைவு நாள் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஆக, மன்னர் இன்விக்டஸ் போட்டிகளில் கலந்து கொள்வாரா, அல்லது தன் காதல் மனைவியின் 80ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வாரா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.