இளவரசர் ஹரியின் அச்சம்; நிபுணர் கூறும் செய்தி
பிரித்தானிய இளவரசர் வில்லியம் மன்னராகும் நிலையில், தனக்கு சிக்கல்தான் என அவரது சகோதரரான ஹரி பயப்படுவதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரியின் அச்சம்
பிரித்தானிய மன்னரான சார்லஸின் காலத்துக்குப் பின், இளவரசர் வில்லியம் மன்னராகும் நிலையில், அவர் தனக்கும் பிரித்தானியாவுக்கும் சம்பந்தமே இல்லாமல் செய்துவிடுவார், அதற்குப் பின் தனக்கு பிரித்தானியாவில் வரவேற்பு இருக்காது என ஹரி பயப்படுவதாகத் தெரிவிக்கிறார் ராஜ குடும்ப நிபுணரான டாம் (Tom Bower, 78).
ஆகவே, இப்போதே ஹரி தன் அண்ணனான வில்லியமுடன் சமரசம் செய்துகொள்ளவேண்டும் என்கிறார் டாம்.
சார்லஸ் மரணமடையும் நிலையில் வில்லியமிடமிருந்து தனக்கு எந்த உதவியும் கிடைக்காது என ஹரி பயப்படுவதாகத் தெரிவிக்கும் டாம், தன்னைப் பொருத்தவரை, வில்லியம் தனது முடிசூட்டுவிழாவுக்குக் கூட ஹரியை அழைக்கமாட்டார் என்றே தான் கருதுவதாகவும் தெரிவிக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |