இளவரசர் வில்லியமுடைய ஆண்டு வருமானம் 23 மில்லியன் பவுண்டுகள்: ஹரிக்கு ஏன் பாரபட்சம்?
பிரித்தானிய இளவரசரான வில்லியமுடைய தனிப்பட்ட ஆண்டு வருமானம் 23 மில்லியன் பவுண்டுகள்.
ஆனால், ஹரிக்கு அத்தகைய வருமானம் கிடையாது. அப்படியானால், உண்மையாகவே ஹரி தனது ஸ்பேர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல அவருக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுகிறதா?
ஹரிக்கு ஏன் பாரபட்சம்?
உண்மை என்னவென்றால், அந்த 23 மில்லியன் பவுண்டுகள் வருமானம், இளவரசர் வில்லியமுக்கானது அல்ல, அது அவர் வகிக்கும் பதவிக்கானது.

பிரித்தானிய ராஜகுடும்பத்தில், யார் மன்னரின் மூத்த மகனோ, அவருக்கு கார்ன்வால் கோமகன் என்னும் பட்டம் அல்லது பதவி வழங்கப்படும்.
அந்த பதவியை வகிக்கும் நபருக்கு Duchy of Cornwall என்னும் சொத்து கிடைக்கும். இதற்கு முன் அது மன்னர் சார்லசுக்கு சொந்தமாக இருந்தது. அவர் மன்னரானதும், இளவரசர் வில்லியம் கார்ன்வால் கோமகன் ஆனார்.
ஆகவே அந்த சொத்தும் அவரை வந்தடைந்தது. ஆக, அந்த Duchy of Cornwall என்னும் சொத்திலிருந்து வில்லியமுக்கு வரும் வருமானம்தான் இந்த 23 மில்லியன் பவுண்டுகள்.

எனவே, அது ராஜகுடும்ப மரபு. ஆக, ஹரிக்கு பாரபட்சம் காட்டப்படவில்லை. சொல்லப்போனால், ஹரியின் தாயும், அவரது பாட்டியின் தாயும் அவருக்கு பெரும் தொகையை சொத்தாக வைத்துச் சென்றுள்ளார்கள்.
உண்மையில், இளவரசர் வில்லியம் மன்னராகிவிடுவார், ஹரிக்கு அந்த வாய்ப்பில்லை என்பதால், அவரது பாட்டியும் ஹரிக்குதான் கூடுதல் சொத்து விட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |