போரை நிறுத்துங்கள்... புடினுக்கு இளவரசர் ஹரியின் நேரடி கோரிக்கை
இளவரசர் ஹரி, தான் புகழ்பெற்ற இளவரசி டயானாவின் மகன் என்பதை நிரூபிப்பதுபோல அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ஆம், போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இளவரசர் ஹரி, போரை நிறுத்துமாறு ரஷ்ய ஜனாதிபதியான புடினுக்கு நேரடி கோரிக்கை விடுத்துள்ளார்.
போரை நிறுத்துங்கள்...
இளவரசி டயானாதான், கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் செல்வது, ஹெச் ஐ வி பாதித்த பிள்ளைகளை தூக்கிவைத்துக் கொஞ்சுவது என அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

டயானாவைப்போலவே அவரது மகனான இளவரசர் ஹரியும் அதிரடியாக போர் நடக்கும் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சமீபத்தில், தெற்கு உக்ரைனிலுள்ள Zaporizhzhia என்னுமிடத்தில் ரயில் நிலையம் ஒன்றை ரஷ்ய ட்ரோன்கள் தாக்கிய நிலையில், ஒரு ஊழியர் உயிரிழந்தார்.
அப்படியிருந்தும் இளவரசர் ஹரி ரயிலில் பயணித்து உக்ரைன் தலைநகரான கீவ் சென்றுள்ளார்.
உக்ரைனில், கீவ் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஹரி, ’ஜனாதிபதி புடின் அவர்களே, எந்த ஒரு நாடும் நாம் சாட்சியாக நிற்கும் இதுபோன்ற தொடர் உயிரிழப்புகளால் லாபம் அடைவதில்லை’ என்றார்.

உக்ரைன் மற்றும் ரஷ்ய நாட்டவர்கள் மேலும் துன்புறுவதை நிறுத்த, வித்தியாசமான ஒரு வழியைத் தேர்ந்தெடுக்க, இப்போதும் இந்தப் போரை நிறுத்த ஒரு தருணம் இருக்கிறது என்று கூறிய ஹரி, போரை நிறுத்துமாறு புடினை வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானிய ராஜகுடும்பத்தினர் பொதுவாக நேரடியாக உலக அரசியல் குறித்து விமர்சிப்பதில்லை. அப்படிப்பட்ட நிலையில், ஹரி போரை நிறுத்துமாறு நேரடியாக புடினை கோரியுள்ளது கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |