வில்லியம் மன்னரானால்... ஹரி பயப்படுவதாக வெளியான தகவலுக்கு பதிலடி
இளவரசர் வில்லியம் மன்னராகும்போது அவர் தனக்கும் பிரித்தானியாவுக்கும் சம்பந்தமே இல்லாமல் செய்துவிடுவார் என ஹரி பயப்படுவதாக கூறப்பட்ட விடயத்துக்கு ஹரி தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
வில்லியம் மன்னரானால்...
பிரித்தானிய மன்னரான சார்லஸின் காலத்துக்குப் பின், இளவரசர் வில்லியம் மன்னராகும் நிலையில், அவர் தனக்கும் பிரித்தானியாவுக்கும் சம்பந்தமே இல்லாமல் செய்துவிடுவார்.
அதற்குப் பின் தனக்கு பிரித்தானியாவில் வரவேற்பு இருக்காது என ஹரி பயப்படுவதாகத் தெரிவித்திருந்தார் ராஜ குடும்ப நிபுணரான டாம் (Tom Bower, 78).
ஹரி தரப்பு பதில்
டாமின் கருத்தை அர்த்தமற்றது என்று கூறி நிராகரித்துள்ள ஹரி தரப்பு, தன் குடும்பத்துடன் இணையும் விருப்பம் எப்போதுமே ஹரிக்கு உண்டு என்று கூறியுள்ளது.
இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹரியின் செய்தித்தொடர்பாளர், ஹரியைக் குறித்து அதிகம் தெரியாதவர்கள் அவரைக் குறித்து அதிகம் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
தன் குடும்பத்துடன் இணைய விரும்புவதாக ஹரியே கூறியுள்ளார். வாழ்க்கை விலை மதிப்பற்றது, அதனால் சண்டை போட்டுக்கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று அவர் கூறியுள்ளார் என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |