இளவரசர் ஹரியின் அமெரிக்க விசா ரத்து செய்யப்படுமா?: சட்டத்தரணி பரபரப்பு தகவல்...
இளவரசர் ஹரி எழுதிய புத்தகம் அவருக்கு தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது.
தாலிபான்களின் கோபத்தை சம்பாதித்த ஹரி
தான் இராணுவத்தில் இருந்தபோது, 25 பேரைக் கொன்றதாக தனது புத்தகத்தில் கூறியிருந்தார். அதனால் அவர் தாலிபான்களின் கோபத்துக்கும், இராணுவம் மற்றும் பிரித்தானிய மக்களின் விமர்சனங்களுக்கும் ஆளானார்.
The Sun
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்
அதே ‘ஸ்பேர்’ புத்தகத்தில், தான் இளம் வயதில் பல்வேறு போதைப்பொருட்களை பயன்படுத்தியதாக விவரமாக கூறியிருந்தார் இளவரசர் ஹரி.
இந்நிலையில், அவரது கூற்று, அவரது அமெரிக்க விசாவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும் என சட்டத்தரணி ஒருவர் கூறியுள்ளார்.
முன்னாள் பெடரல் சட்டத்தரணியான Neama Rahmani என்பவர், அமெரிக்க சட்டப்படி போதைப்பொருள் பயன்படுத்துவோரை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கக் கூடாது.
அப்படியானால், ஹரிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டிருக்கவேண்டும், அல்லது ரத்து செய்யப்பட்டிருக்கவேண்டும் என்கிறார் அவர். ராஜ குடும்பத்தினருக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது என்கிறார் Neama.
ஆனால், புலம்பெயர்தல் நிபுணரான, சட்டத்தரணி James Leonard என்பவரோ, ஹரி இப்போதும் வழக்கமாக போதைப்பொருள் பயன்படுத்துபவர் அல்ல, அதனால் அவருக்கு இந்த விதி பொருந்தாது என்கிறார்.
The Sun