இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்படலாம்? பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி
இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம் என ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியின் புத்தம் தொடர்ந்து உருவாக்கிவரும் பிரச்சினைகள்
ஹரி தனது ‘ஸ்பேர்’ புத்தகத்தில், தான் பலவகை போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டதாக விலாவாரியாக விளக்கியிருந்தார்.
அந்த விடயம்தான் இப்போது பிரச்சினையை உருவாக்கியுள்ளது.
அதாவது, அமெரிக்காவுக்கான விசா விண்ணப்பித்திலும், அதற்குப் பின்வரும் நேர்காணல்களிலும், சட்டவிரோத போதைப்பொருட்கள் வைத்திருக்கும், பயன்படுத்தும்
அல்லது விநியோகிக்கும் விடயத்தில், எப்போதாவது, ஏதாவது சட்டத்தை மீறியிருக்கிறீர்களா என்ற கேள்வி இடம்பெற்றிருக்கும்.
அதற்கு, ’ஆம்’ என பதிலளிக்கும் பட்சத்தில், அந்த நபருடைய விண்ணப்பம் பொதுவாக நிராகரிக்கப்படும்.
The sun
ஹரி பொய் சொன்னாரா?
அப்படியிருக்கும் நிலையில், ஹரி இந்த விடயத்தில், விசா விண்ணப்பத்தில் பொய் சொன்னாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
The Heritage Foundation என்னும் அமைப்பு, அரசிடமிருந்து ஹரியின் விசா விண்ணப்பத்தில் நகல்களைக் கோரியுள்ளது.
அப்படி ஹரி தனது விண்ணப்பப்படிவத்தில் பொய் சொல்லியிருந்தால் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Credit: Rex
ஹரிக்கு மட்டும் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதா? அது அவர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலா, அல்லது, நடிகையாகிய மேகனின் புகழ் காரணமாகவா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஆகவே, ஹரியின் விசா ரத்து செய்யப்படலாம், அவர் நாடுகடத்தப்படலாம் என சட்டத்தரணிகள் நம்புகிறார்கள்.
2014ஆம் ஆண்டு, பிரித்தானிய தொலைக்காட்சி பிரபலமான chef Nigella Lawson, தான் போதைப்பொருட்களை பயன்படுத்திப் பார்த்ததாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பிரித்தானியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஏற அவருக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Credit: Xposure