உக்ரைனுக்கு இளவரசர் ஹரி திடீர் பயணம்! போரில் காயமடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல்
உக்ரைன் போரில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்து சசெக்ஸ் இளவரசர் ஹரி ஆறுதல் தெரிவித்தார்.
இளவரசர் ஹரி உக்ரைன் பயணம்
சசெக்ஸ் இளவரசர் ஹரி உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக போரில் காயமடைந்த வீரர்களுக்கு ஆதரவளிக்க லிவிவ்(Lviv) நகருக்கு யாரும் அறியாத வகையில் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
லண்டனில் அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணையை தொடர்ந்து, வியாழக்கிழமை இந்த முக்கிய பயணம் நிகழ்ந்துள்ளது.
ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட லிவிவ் நகரில் உள்ள சூப்பர்ஹியூமன்ஸ் மையத்திற்கு இளவரசர் ஹாரி சென்றார்.
அங்கு, போரில் காயமடைந்த இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக செயற்கை உறுப்புகள், மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மற்றும் உளவியல் ஆதரவு போன்ற அத்தியாவசிய மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த பயணத்தில், இளவரசர் ஹரியுடன் அவரது இன்விக்டஸ் கேம்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த திடீர் பயணத்தின் போது சூப்பர் ஹியூமன்ஸ் மையத்தில் நோயாளிகளையும் மருத்துவ ஊழியர்களையும் சந்தித்து, போர்க்கால சூழ்நிலையில் வழங்கப்படும் அத்தியாவசிய உதவிகளை நேரடியாக பார்வையிட்டார்.
2022 பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, உக்ரைனுக்கு பயணம் செய்த பிரித்தானிய அரச குடும்பத்தின் இரண்டாவது உறுப்பினர் இளவரசர் ஹரி ஆவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |