இளவரசர் ஹரியின் இரண்டாவது குழந்தை பிரித்தானிய குடிமகளா அமெரிக்க குடிமகளா?
பிரித்தானிய இளவரசர் ஹரி மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக மகள் பிறந்துள்ள நிலையில், அந்தக் குழந்தை பிரித்தானிய குடிமகளா அல்லது அமெரிக்க குடிமகளா என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது.
ஹரி மேகன் தம்பதிக்கு இம்மாதம் (ஜூன்) 4ஆம் திகதி இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு, லிலிபெட் லில்லி டயானா மவுண்ட்பேட்டன் விண்ட்சர் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், லிலிபெட் பிரித்தானிய குடிமகளா அல்லது அமெரிக்க குடிமகளா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேகன் அமெரிக்க குடிமகள் என்பதால், அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு இயற்கையாகவே அமெரிக்க குடியுரிமை கிடைத்துவிடும்.
அதேபோல், ஹரி பிரித்தானிய குடிமகன் என்பதால், அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு தானாகவே பிரித்தானிய குடியுரிமை கிடைத்துவிடும். ஆகவே, ஹரி மேகன் தம்பதியரின் மகளான லிலிபெட் இரட்டைக் குடியுரிமை கொண்டிருப்பார்.