இளவரசர் பிலிப்பின் தாய்-தந்தையை பார்த்துள்ளீர்களா?அவர் உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்
இளவரசர் பிலிப் மறைந்த நிலையில், அவர் குடும்பத்தினரிடன் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
மகாராணியான இரண்டாம் எலிசபெத்தை இளவரசர் பிலிப் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிரேக்க மற்றும் டேனிஷ் அரச குடும்பத்தினருக்கு பிறந்த பிலிப், எலிசபெத்தை திருமணம் செய்வதற்காக, தன்னுடைய குடும்பத்தையே பிரிந்தார்.
இதன் காரணமாகவே, அவருக்கு மகாராணி இரண்டாம் எலிசபெத், எடின்பர்க் கோமகன் என்ற பட்டத்தை வழங்கினார்.
இருப்பினும் இளவரசர் பிலிப்பை தெரிந்த பலருக்கும், அவருடைய குடும்பத்தைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இளவரசர் பிலிப்பின் தாய் பெயர் Alice (Princessof Battenberg), தந்தை பெயர் prince Andrew, இந்த தம்பதிக்கு பிலிப்புடன் சேர்ந்து ஐந்து பிள்ளைகள்.
இதில் பிலிப் தான் கடைசி பிள்ளை, மற்று மூன்று பேரும் சகோதரிகள், அதில் மூத்த சகோதரியின் பெயர் Margarita (Princess of Greece and Denmark) இவர் கடந்த 1981-ல் இறந்துவிட்டார்.
இரண்டாவது சகோதரியான மற்றொருவரின் பெயர் Princess theodora 1969-லும், மூன்றாவது சகோதரியான Cecilie (Princess of Greece and Denmark ) 1937-லும், நான்காவது சகோதரி Sophie (Princess of Greece and Denmark) 2001-லும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.