பட்டம் வேண்டாம் என மறுக்கும் இளவரசியும் இளவரசரும்: அவர்களுக்காக வில்லியம் வைத்துள்ள பெரிய திட்டம்
ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியும் ராஜ குடும்ப பட்டங்களை விட மறுக்கிறார் இளவரசர் ஹரியின் மனைவியான மேகன்.
ஆனால், ராஜ குடும்பத்திலேயே பிறந்தும் தங்களுக்கு பட்டங்கள் வேண்டாம் என மறுத்துள்ளனர் ஒரு இளவரசியும் இளவரசரும்.
பட்டம் வேண்டாம் என மறுக்கும் இளவரசியும் இளவரசரும்
மறைந்த எலிசபெத் மகாராணியாரின் கடைசி மகன் இளவரசர் எட்வர்ட். அதாவது, அவர் மன்னர் சார்லசின் தம்பி.
அவரது பிள்ளைகள் லூயிஸும் (Lady Louise Windsor, 21) ஜேம்ஸும் (17).
Image: UK Press via Getty Images
இருவரும் ராஜ குடும்பத்தில் பிறந்ததால், பிறப்பிலேயே அவர்கள் இளவரசியும் இளவரசரும்.
என்றாலும், அவர்களுடைய பெற்றோரான இளவரசர் எட்வர்டும் அவரது மனைவியான எடின்பர்க் கோமள் சோபியும் தங்கள் பிள்ளைகளுக்கு Her Royal Highness, His Royal Highness என்னும் பட்டங்கள் வேண்டாம், அவர்கள் சாதாரண மக்களாககே வளரட்டும் என்று கூறிவிட்டார்கள்.
அத்துடன் லூயிஸுக்கு 18 வயதானதும், இளவரசி என அழைக்கப்படும் உரிமை அவருக்கு தானாகவே வந்துவிட்டது. என்றாலும், இதுவரை அவர் அந்த பட்டத்தை பயன்படுத்தவில்லை.
வில்லியம் வைத்துள்ள பெரிய திட்டம்
இந்நிலையில், வருங்கால மன்னரான இளவரசர் வில்லியம், லூயிஸ் மற்றும் ஜேம்ஸுக்காக பெரிய திட்டம் வைத்துள்ளதாக Scottish Daily Express என்னும் ஊடகம் தெரிவித்துள்ளது.
ஆம், அவர்களையும் ராஜ குடும்பத்தில் முக்கிய பொறுப்புகள் வகிக்கும், ‘பணி செய்யும் ராஜ குடும்ப உறுப்பினர்களாக’ (working royals) ஆக்க வில்லியம் திட்டம் வைத்துள்ளாராம்.
மன்னர் சார்லஸ், அதிக எண்ணிக்கையிலான பணி செய்யும் ராஜ குடும்ப உறுப்பினர்கள் வேண்டாம் என்று கூறி அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைத்துவிட்டார்.
ஆனால், மன்னரும் இளவரசி கேட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, பொறுப்புகளை நிறைவேற்ற யாரும் இல்லாததால், வில்லியம் அதிக பொறுப்புகளை ஏற்க நேர்ந்தது.
ஆகவே, தந்தையின் எண்ணங்களுக்கு மாறாக, கூடுதல் பணி செய்யும் ராஜ குடும்ப உறுப்பினர்கள் வேண்டும் என்று நினைக்கிறார் வில்லியம்.
ஆகவே, லூயிஸையும், ஜேம்ஸையும் பணி செய்யும் ராஜ குடும்ப உறுப்பினர்களாக ஆக்க வில்லியம் திட்டம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |