பிரபல பாடகியுடன் ஆடி, பாடி பிறந்தநாளை கொண்டாடிய இளவரசர் வில்லியம் - வைரலாகும் காட்சிகள்
பிரபல Pop பாடகியான Taylor Swift பிரித்தானிய இளவரசர் வில்லியமுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமானது தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல பாடகியுடன் selfie எடுத்த பிரித்தானிய இளவரசர்
இளவரசர் வில்லியமின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தனது குழந்தைகளுடன் சேர்ந்து பிரபல இசைக் கச்சேரிக்கு சென்றுள்ளார்.
இளவரசர் வில்லியமைப் பொறுத்தவரை, அவரது இரண்டு மூத்த குழந்தைகளை நகரத்தில் நடக்கும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
ஜூன் 21ஆம் திகதி அன்று இளவரசர் வில்லியம் தனது 42 ஆவது பிறந்தநாளை குழந்தைகளுடன் வெம்ப்லி அரங்கில் நடைபெற்ற பிரபல Pop பாடகியான Taylor Swift இன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருந்தார்.
இதன் போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன.
குறித்த புகைப்படத்தை வெளியிட்ட பிரித்தானிய இளவரசர் வில்லியம் இப்பதிவில், “சிறந்த மாலைப் பொழுதுக்கு Taylor Swift இற்கு நன்றி,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Thank you @taylorswift13 for a great evening! #LondonTSTheErastour pic.twitter.com/NFSi8hAl1o
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) June 22, 2024
Taylor Swift வெளியிட்ட அந்த புகைப்படம்
பாடகி Taylor Swift இளவரசர் வில்லியம், அவருடைய குழந்தைகள் மற்றும் பாடகியின் காதலரான அமெரிக்கக் காற்பந்து விளையாட்டு வீரர் டிரவிஸ் கெல்சுடனும் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார்.
Happy Bday M8! London shows are off to a splendid start ????? @KensingtonRoyal pic.twitter.com/VlD6V0PiEL
— Taylor Swift (@taylorswift13) June 22, 2024
மேலும் இளவரசர் வில்லியம் "shake it off" என்ற பாடலுக்கு நடினமாடும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
I am sorry but prince william dancing to shake it off has me wheeeeeezing pic.twitter.com/hDyLxtJIdt
— nich⸆⸉ (@sohighschooll) June 22, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |