சார்லஸுக்கு பிறகு பிரித்தானிய மன்னர் அரியாசனம் வில்லியமுக்கு கிடைக்காது! மர்மமான காரணங்கள்
சார்லஸுக்கு பின்னர் மன்னர் பதவிக்கு வில்லியம் வர மாட்டார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
மன்னர் சார்லஸ்
பிரித்தானிய வரலாற்றில் மன்னராக பதவியேற்றவர்களில் வயதில் மூத்த நபரான சார்லஸ், கடந்த செப்டம்பரில் தனது தாய் ராணி எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து தொடர்ச்சியாக செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.
இந்நிலையில் புதிய மன்னர் தனது மூத்த மகன் இளவரசர் வில்லியமுக்கு அரியணையை விட்டுக்கொடுக்கலாம் என்ற ஊகங்களும் வதந்திகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
sportsfinding
ஒரு ஊடகமானது வருங்காலத்தை கணித்து குறி சொல்பவர்கள் சிலரை மேற்கொள்காட்டி சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி மன்னர் சார்லஸ் தனது வயது முதிர்வு காரணமாக அரியணையை துறக்கக்கூடும் என்றும் இளவரசர் வில்லியம் அவரது இடத்தைப் பிடிக்க மாட்டார் என்றும் அந்த ஊடகம் தெரிவிக்கிறது.
மர்மமான காரணங்கள்
வாரிசு வரிசையில், வில்லியம் அடுத்த இடத்தில் இருக்கும் போதிலும் சில மர்மமான காரணங்கள் அவரை புதிய மன்னராக மாற்றாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வதந்திகள் உண்மையாக மாறுமேயானால் இளவரசர் வில்லியம் தனது தந்தை சார்லஸ்க்கு பிறகு மன்னராக வரமாட்டார்.
இதற்கிடையில், ராணியின் மரணம் தொடர்பில் முன்னரே கணித்த குறி சொல்பவரான ஜெமிமா பேக்கிங்டன், மன்னர் சார்லஸ் அடுத்த ஆண்டு இளவரசர் வில்லியமிடம் ஆட்சியை ஒப்படைப்பார் என்று கூறயது குறிப்பிடத்தக்கது.
AP