இளவரசர் வில்லியமின் உறவினர் பெண்ணுக்கு லண்டனில் திருமணம்
இங்கிலாந்தின் லண்டன் நகரில் இளவரசர் வில்லியமின் உறவினர் ஃபோப் நாட்ச்புல், முதலீட்டு வங்கியாளரை மணந்தார்.
மவுண்ட்பேட்டனின் கொள்ளுப் பேத்தி
பார்மாவின் முதல் ஏர்ல் மவுண்ட்பேட்டனின் கொள்ளுப் பேத்தி ஃபோப் நாட்ச்புல் (Phoebe Knatchbull).
இளவரசர் வில்லியமின் உறவுக்கார பெண்ணான இவருக்கும், முதலீட்டு வங்கியாளர் லியோபோல்ட் குளோவர் என்பவருக்கும் லண்டனில் திருமணம் நடைபெற்றது.
முன்னதாக, இந்த ஜோடி ஆண்டின் தொடக்கத்தில் நியூயார்க் நகரில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது. அங்கு அவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஃபோபி நாட்ச்புல்
மணப்பெண் ஃபோபியின் சகோதரி டெய்சி, தனது சமூக வலைதள பக்கத்தில் திருமணம் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூறியிருந்தார்.
ஆனால் ஃபோபி தனது கணக்கை தனிப்பட்டதாக (Privacy) வைத்துள்ளார். மவுண்ட்பேட்டன்ஸ் குடும்பத்தார் பிரித்தானிய முடியாட்சியுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஃபோபியின் பெற்றோர் பிலிப் மற்றும் அட்லாண்டா, அவரது இளம் வயதில் பிரிந்தனர். பின்னர் அவரின் தந்தை வெண்டி லீச்சை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |