தந்தையை அழவைத்த இளவரசர் வில்லியம்: முதன்முறையாக மனம் திறந்த மன்னர் சார்லஸ்
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரித்தானிய மன்னர் சார்லஸ், தன் மூத்த மகனும், வேல்ஸ் இளவரசருமான வில்லியம் தன்னை அழவைத்தது குறித்த ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக மனம் திறந்த மன்னர்
பொதுவாக வெளிப்படையாக பேசாத சார்லஸ் அந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக மனம் திறந்து பேசினார். முன்னொரு முறை, இளவரசர் வில்லியம் இரண்டாம் தலைமுறை விவசாயியான Mervyn Keeling என்பவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, தங்களுடைய சொத்து ஒன்றைக் குறித்த ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார்.
Image: Getty Images
அதாவது, மன்னர் சார்லசுக்கு Duchy of Cornwall estate என்னும் பிரம்மாண்ட சொத்து ஒன்று இருந்தது. அதைக் குறித்துத்தான் வில்லியம் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
அதாவது, அந்த சொத்து எதிர்காலத்தில் தனக்கு வரப்போவதைக் குறித்தும், அதை தான் என்ன செய்யப்போகிறேன் என்பதைக் குறித்தும் தான் சிந்திக்கத் துவங்கிவிட்டதாக அப்போது குறிப்பிட்டிருந்தார் வில்லியம்.
Image: Getty
குடும்பம் என்னும் கோணத்தில் பார்க்கும்போது, அது உண்மையாகவே முக்கியமான விடயம் என நான் கருதுகிறேன் என்றார் வில்லியம்.
கண்ணீரை வரவழைத்த விடயம்
அந்த காட்சிதான் தன் கண்களில் கண்ணீரை வரவழைத்ததாகத் தெரிவித்துள்ளார் மன்னர் சார்லஸ். தான் வில்லியம் பேசியதைக் கேட்டு தான் இதயத்தில் தொடப்பட்டதாக தெரிவித்த சார்லஸ், என் மகன் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தைகள், 50 ஆண்டுகளாக நான் அந்த சொத்தைப் பராமரித்து வந்ததன் பலனை அடைந்துவிட்டதுபோல் என்னை உணரவைத்தன என்று கூறியுள்ளார்.
Image: PA
விடயம் என்னவென்றால், அந்த பெரிய சொத்தை மன்னர் சார்லஸ் கடந்த 50 ஆண்டுகளாக நிர்வகித்துவந்தார். மகாராணி எலிசபெத் மறைந்து, சார்லஸ் மன்னரானதைத் தொடர்ந்து அந்த சொத்து வில்லியமை வந்தடைந்துள்ளது. ஆக, எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைக் குறித்து தன் மகன் அக்கறையுடன் பேசியதால்தான் உணர்ச்சிவசப்பட்டுள்ளார் மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |