கொஞ்சமும் விருப்பமில்லை... அரண்மனை கட்டாயப்படுத்தியதால் ஹரிக்கு பதிலளித்த வில்லியம்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் புற்றுநோய் பாதிப்பு தொடர்பான தகவல் வெளியானதும், இளவரசர் ஹரி அனுப்பிய குறுந்தகவலுக்கு வில்லியம் பதிலளித்துள்ளார் என்ற தகவல் வெளியானது.
அரண்மனை கட்டாயப்படுத்தியது
இளவரசர் ஹரியின் குறுந்தகவலுக்கு விருப்பமின்றியே, அரண்மனை கட்டாயப்படுத்தியதை அடுத்தே வேல்ஸ் இளவரசர் வில்லியம் பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.
சார்லஸ் மன்னர் தமது புற்றுநோய் பாதிப்பை ஹரி - மேகன் தம்பதி உட்பட குடும்பத்தில் அனைவருடனும் பகிர்ந்துகொண்ட பின்னரே, பொதுமக்களுக்கு அறிவித்துள்ள நிலையில், கேட் - வில்லியம் தம்பதி குடும்பத்தினர் பட்டியலில் ஹரி - மேகன் தம்பதியை தவிர்த்துள்ளனர்.
பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்ட தகவலை அடுத்தே, ஹரி - மேகன் தம்பதி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் என்ற தகவலை அறிந்துகொண்டனர்.
இதனையடுத்து, இருவரும் கேட் மிடில்டனை ஆறுதல் படுத்தும் வகையில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளதுடன், தனிப்பட்டமுறையில் வில்லியம் மற்றும் கேட் தம்பதியை குறுந்தகவல் மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர்.
இளவரசர் ஹரி லண்டன் திருபுவது
ஆனால், வேல்ஸ் இளவரசர் வில்லியம் எந்த விருப்பமும் இன்றி, அரண்மனை கட்டாயப்படுத்தியதன் பேரிலேயே இளவரசர் ஹரிக்கு பதிலளித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
முன்னதாக வேல்ஸ் இளவரசர் வில்லியம் தமது சகோதரரை நாடு திரும்ப கோரியதாகவும், இது ஹரி - மேகன் தம்பதி இடையே விவாதத்தை ஏற்படுத்தியதாகவும் தகவல் வெளியானது.
அது உண்மையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதனாலையே, கேட் மிடில்டனை சந்திக்கும் பொருட்டு இளவரசர் ஹரி லண்டன் திருபுவது தொடர்பில் உறுதியான எந்த தகவலும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
ஆனால் ஹரி நாடு திரும்புவதில் சார்லஸ் மன்னர் ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |