பண்ணையில் தொழிலாளர்களுடன் களத்தில் இறங்கிய இளவரசர் வில்லியம்
பிரித்தானிய இளவரசர் வில்லியம் பண்ணை ஒன்றில் விவசாயத் தொழிலாளர்களுடன் பணிகளில் ஈடுபட்டார்.
விவசாயிகளை சந்தித்த இளவரசர்
பிரித்தானிய அரியணைக்கு வாரிசான இளவரசர் வில்லியம், ஹெர்ட்ஃபோர்ட்ஷயரில் உள்ள ப்ரோம்யார்ட் அருகே விவசாயிகளை சந்தித்தார்.
Richard Pohle/The Times/PA Wire
அங்கு அவர் மனநலத்தின் முக்கியத்துவம் குறித்து அவர்களுடன் உரையாடியதுடன், பண்ணையில் சில வேலைகளுக்கும் உதவினார்.
இளவரசர் மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல், சில ஆப்பிள் மரங்களை கவாத்து செய்யும் பணிகளில் உதவினார்.
பின்னர் தொழிலாளி ஒருவரின் செம்மறி ஆடுகளுக்கு உணவளித்த அவர், பண்ணையின் கொட்டகைகளில் ஒன்றில் உள்ள ஆட்டுப்பட்டியில் நுழைந்து, மந்தைக்கு பாரிய பாக்கெட்டுகளில் இருந்த தீவனத்தை அளித்தார்.
Richard Pohle/The Times/PA Wire
மேலும், விவசாயத் தம்பதியினருடன் சேர்ந்து அவர்கள் வளர்க்கும் இளம் கிறிஸ்துமஸ் மரங்களை ஆய்வு செய்தார்.
முன்முயற்சி
We Are Farming Minds என்ற தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவாக வேல்ஸ் இளவரசரின் புதிய முன்முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
Richard Pohle/The Times/PA Wire
இந்நிறுவனம், விவசாய சமூகத்தில் மனநலம் குறித்த களங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக நிறுவப்பட்டதாகும். இது விவசாய சமூகத்தில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிபுணர்களுக்கு இலவச மனநலப் பயிற்சி வகுப்புகளையும் வழங்குகிறது.
இந்தத் தொண்டு நிறுவனத்தின் புரவலராக வில்லியம் மார்ச் 2025யில் பொறுப்பேற்றார்.
Richard Pohle/The Times/PA Wire
Ryan Jenkinson/Kensington Palace
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |