வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் பிறந்தநாள்: வில்லியமின் இதயம் தொடும் வாழ்த்து!
வேல்ஸ் இளவரசர் வில்லியம் தன்னுடைய மனைவியான இளவரசி கேட் மிடில்டனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இளவரசி கேட் மிடில்டன் பிறந்தநாள்
பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன்(Kate Middleton) இன்று தன்னுடைய 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில், வேல்ஸ் இளவரசி மற்றும் தன்னுடைய மனைவியான கேட்டிற்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை வேல்ஸ் இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
To the most incredible wife and mother. The strength you’ve shown over the last year has been remarkable. George, Charlotte, Louis and I are so proud of you. Happy Birthday, Catherine. We love you. W pic.twitter.com/VIW5v2aKlu
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) January 9, 2025
அதில், கடந்த ஆண்டு இளவரசி கேட் எதிர்கொண்ட சவால்களை அங்கீகரித்துள்ள இளவரசர் வில்லியம், புதிய புகைப்படத்துடன் இளவரசர் சமூக ஊடகத்தில் கேட்டின் "அசாதாரணமான வலிமையை" வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.
இளவரசர் வில்லியம் வாழ்த்து
கேட் பிறந்தநாள் வாழ்த்து தொடர்பில் வில்லியம் வெளியிட்டுள்ள செய்தியில், "மிகவும் அற்புதமான மனைவி மற்றும் தாய்க்கு. கடந்த ஆண்டில் நீங்கள் காட்டிய வலிமை குறிப்பிடத்தக்கது. ஜார்ஜ், சார்லோட், லூயிஸ் மற்றும் நான் உங்களால் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள், கேத்ரின். நாங்கள் உன்னை நேசிக்கிறோம். W." என தெரிவித்துள்ளார்.
வில்லியமின் இந்த வாழ்த்து செய்தியில், கடந்த ஆண்டு வின்ட்சரில் Matt Porteous எடுத்த புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
அதில், இளவரசி கேட் ஓய்வாகவும் பிரகாசமாகவும் கிரிங்காம் ஸ்கார்ப் அணிந்து, கைகளை ஜீன்ஸ் பாக்கெட்டில் தளர்வாக வைத்திருப்பது போல நின்று கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |