ரஷ்ய எல்லையில் பிரித்தானிய இளவரசர் வில்லியம்: உலகின் கவனத்தை ஈர்த்துள்ள பயணம்
பிரித்தானியாவின் வருங்கால மன்னரான இளவரசர் வில்லியம், ரஷ்ய எல்லையிலுள்ள எஸ்தோனியா நாட்டுக்கு சென்றுள்ள விடயம் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
ரஷ்ய எல்லையில் இளவரசர் வில்லியம்
அமைதியாக, உலக அமைதிக்கான நடவடிக்கைகளில் பிரித்தானியா இறங்கியுள்ளதுபோல் தெரிகிறது.
கனடாவுடன் வம்பு செய்துவரும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு மன்னர் சார்லஸ் பிரித்தானியா வர அழைப்புவிடுத்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதியை தனது வீட்டுக்கு அழைத்துப் பேசியுள்ளார். கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவையும் சந்தித்துள்ளார் மன்னர் சார்லஸ்.
தந்தைக்கு அடுத்தபடியாக மகனும் தன் பங்குக்கு எஸ்தோனியா நாட்டுக்குச் சென்றுள்ளார்.
ரஷ்ய எல்லையில் அமைந்துள்ளது எஸ்தோனியா நாடு. ஆக, ரஷ்யா உக்ரைன் போர்ச்சூழலின் நடுவே இளவரசர் வில்லியம் எஸ்தோனியாவுக்குச் சென்றுள்ள விடயத்தை உலகம் உற்றுக் கவனிக்கிறது.
எஸ்தோனியாவின் கோரிக்கை
இளவரசர் வில்லியம் எஸ்தோனியா சென்றதும், எஸ்தோனிய ஜனாதிபதி Alar Karis அவருக்கு பெரும் வரவேற்பளிக்க, ஏராளமான மக்களும் கூடி வில்லியமுக்கு வரவேற்பளித்தார்கள்.
வில்லியமுடனான சந்திப்பை பயன்படுத்திக்கொண்ட எஸ்தோனிய ஜனாதிபதியான Alar Karis, நேரடியாகவே வில்லியமிடம் பிரித்தானிய படைகளை தங்கள் நாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளவேண்டாம் என கோரிக்கை வைத்துவிட்டார்.
ஆக, ரஷ்ய உக்ரைன் போர், மத்திய கிழக்கு பதற்றம் என உலகம் போரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், மெல்ல, உலக அமைதிக்கான முயற்சிகளில் பிரித்தானிய மன்னர் சார்லசும், வருங்கால மன்னர் வில்லியமும் இறங்கியுள்ளதை தெளிவாகக் காணமுடிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |