அது நடந்தால் மட்டுமே இளவரசர் வில்லியம் அமெரிக்கா செல்வார்: வெளியான தகவல்
FIFA உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து அல்லது ஸ்கொட்லாந்து தகுதி பெற்றால் மட்டுமே, இளவரசர் வில்லியம் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளவரசர் வில்லியம்
FIFA உலகக்கிண்ணக் கால்பந்து போட்டித் தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் நடந்து வருகிறது.
இத்தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், கால்பந்து சங்கத்தின் தலைவராக உள்ள வேல்ஸ் இளவரசர் வில்லியம் இதுவரை எந்தப் போட்டியையும் பார்க்க செல்லவில்லை.
ஆனால், ஜூலை 19ஆம் திகதி அன்று நியூயார்க்கின் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட இறுதிப்போட்டியில் இளவரசர் வில்லியம் கலந்துகொள்வார்.
அதிலும் இங்கிலாந்து அல்லது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நாடான ஸ்கொட்லாந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால் மட்டுமே அவர் கலந்துகொள்வார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து-அமெரிக்க உறவுகள்
இந்நிகழ்விற்கான இளவரசரின் திட்டங்களை கென்சிங்டன் அரண்மனை உறுதிப்படுத்தவில்லை; ஆனால் ஏப்ரல் மாதம் மன்னர் சார்லஸின் வெற்றிகரமான அரசுமுறைப் பயணம் இருந்தபோதிலும், இங்கிலாந்து-அமெரிக்க உறவுகள் மோசமடைந்துள்ள சூழலில் இது நடைபெறுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஏற்படக்கூடிய ஒரு சிக்கலான மோதலை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம் ட்ரம்பிற்கும், வில்லியமிற்கும் இடையே ஒரு சங்கடமான சந்திப்பைத் தவிர்க்க அரச குடும்பம் ஆர்வமாக இருப்பதால், தேவைப்பட்டால் மட்டுமே இளவரசர் இறுதிப்போட்டிக்கு பயணம் செய்வார் என்றும் தெரிய வந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |