2023 மகளிர் கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டி: இங்கிலாந்து அணிக்கு இளவரசர் வில்லியம் வாழ்த்து:வீடியோ
2023 மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து கால்பந்து அணி நாளை விளையாட உள்ள நிலையில் வேல்ஸ் இளவரசர் வில்லியம் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இறுதிப் போட்டியில் இங்கிலாந்து கால்பந்து அணி
மகளிர் கால்பந்து உலக கோப்பை-2023 அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வைத்து நடைபெற்று வருகிறது.
லீக் சுற்றுகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு நடைபெற்ற அரையிறுதி போட்டியில், அவுஸ்திரேலியா அணியை 1-3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இங்கிலாந்து கால்பந்து அணியும், சுவீடன் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ஸ்பெயின் அணியும், 2023 மகளிர் கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளன.
இந்த இறுதிப் போட்டி ஆகஸ்ட் 20ம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற உள்ளது.
வேல்ஸ் இளவரசர் வாழ்த்து
இந்நிலையில் இறுதிப் போட்டியில் நாளை விளையாட உள்ள இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணிக்கு பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசர் வில்லியம் தன்னுடைய மகள் இளவரசி சார்லோட் உடன் இணைந்து வீடியோ வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணியை குறிப்பிட்டு "சிங்கப் பெண்களே நாளைய தினத்திற்கான என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்".
Good luck for tomorrow @Lionesses ???????? pic.twitter.com/a4WJ7ycVTK
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) August 19, 2023
அங்கு நேரில் வர முடியாததிற்காக எங்களை மன்னித்து விடுங்கள், ஆனால் நீங்கள் சாதித்த அனைத்திற்காகவும் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், மேலும் இங்கேயும், உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களை நீங்கள் ஈர்த்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.
எனவே நாளை உற்சாகமாக வெளியே சென்று மகிழ்ச்சியுடன் விளையாடுங்கள் என இளவரசர் வில்லியம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வீடியோவின் இறுதியில் இளவரசி சார்லோட்-டும் இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Princess Charlotte , 2023 Women's Football World Cup final, England Football Team, prince william