இளவரசர் ஹரி குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்த இளவரசர் வில்லியம்
பிரித்தானிய இளவரசர் ஹரி, தன் மனைவியான மேகனுடன் ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து ராஜ குடும்பம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார்.
தனது சுயசரிதை புத்தகமான ஸ்பேர் என்னும் புத்தகத்திலும் அவர் தனது அண்ணனான இளவரசர் வில்லியம் மற்றும் அண்ணி கேட் குறித்தும் சர்ச்சைக்குரிய விடயங்களை எழுதியிருந்தார்.
அதைத் தொடர்ந்து சகோதரர்களுக்குள் பிளவு ஏற்பட்டது. எப்போதும், எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வதால் மும்மூர்த்திகள் என அழைக்கப்பட்ட வில்லியம், கேட், ஹரி உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, தன் தம்பியான ஹரி குறித்து பேசுவதையே தவிர்த்துவந்த வில்லியம், சமீபத்தில் ஹரி பிரித்தானியா வந்து தங்கள் தந்தையான மன்னர் சார்லசை சந்தித்த நிலையிலும் ஹரியை சந்திக்கவில்லை.
முதன்முறையாக மௌனம் கலைத்த இளவரசர் வில்லியம்
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இளவரசர் வில்லியம், முதன்முறையாக தனது பேச்சில் தனது தம்பியான ஹரி குறித்து குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, ராஜ குடும்பத்தைப் பொருத்தவரை, அரசாளும் பொறுப்பு மூத்த பிள்ளைக்கு மட்டுமே. இரண்டாவது பிள்ளைக்கு அந்த வாய்ப்பு இல்லை என்பதால், அந்தப் பிள்ளை மனம் வருந்தும் ஒரு நிலை காணப்படுகிறது.
அதை சுட்டிக்காட்டும் வகையில்தான், ஹரி ‘ஸ்பேர்’ என்னும் புத்ததகத்தையே எழுதினார்.
ஆக, நாளை இளவரசர் வில்லியமுடைய மூத்த மகனான ஜார்ஜ் மன்னராகும்போது, அவரது தம்பியான லூயிஸ் ஹரியைப்போலவே ஏமாற்றமடைய வாய்ப்பு உள்ளது.
அது குறித்து பேசியபோதுதான் வில்லியம் ஹரியின் பெயரைக் குறிப்பிட்டார். அதாவது, எதிர்காலத்தில் ஹரியைப் போலவே லூயிஸும் கவலைப்படக்கூடாது என்பதால், தான் மன்னராகும்போது சில மாற்றங்களைச் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார் வில்லியம்.
நாளை அப்படி ஒரு நிலை வரும்போது, யாரும் வருத்தப்படும் நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக, என்னாலியன்ற அனைத்து விடயங்களையும் நான் செய்வேன் என்றும் உறுதியளித்துள்ளார் வில்லியம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |