இளவரசர் ஆண்ட்ரூவின் மகள்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி

Royal Family Epstein Files
By Balamanuvelan Mar 12, 2026 11:24 AM GMT
Report

அமெரிக்க நீதித்துறை, வேலை தருவதாக வாக்களித்து, ஏராளமான இளம்பெண்களை சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்னும் நபர் தொடர்பில் வெளியிட்டுவரும் ஆவணங்களில், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அவரது முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசனின் பெயர்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து அவர்களுக்கு சிக்கல் உருவானது.

என்றாலும், அவர்கள் ராஜகுடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள் என்றும், அதனால், பாவம், அவர்களுடைய அப்பாவி மகள்களின் பெயர்களும் கெடுகின்றன என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவந்தன. 

இளவரசர் ஆண்ட்ரூவின் மகள்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி | Princess Beatrice Eugenie Warning As Palace Quiet

ஆனால், அந்த நிலைமை இப்போது மாறிவிட்டது. ஆண்ட்ரூ சாரா தம்பதியரின் மகள்களான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியும், தங்கள் தாயுடன் எப்ஸ்டீனை சந்திக்கச் சென்றதாக சமீபத்திய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதையடுத்து அவர்களும் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்கள்.

ஒரு எச்சரிக்கை செய்தி

இந்நிலையில், இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கு எச்சரிக்கை செய்தி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும் தங்கள் தாயுடன் மியாமியிலிருந்த எப்ஸ்டீனை சந்திக்கச் சென்றதாக சமீபத்திய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

விடயம் என்னவென்றால், இளவரசிகள் இருவரும், தங்கள் தாயுடன் எப்ஸ்டீனை பார்க்கச் சென்றபோது, அவர் சிறுமி ஒருத்தியை சீரழித்த வழக்குக்காக சிறை சென்று திரும்பியிருந்தார். அத்துடன், அவர் வீட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். 

இளவரசர் ஆண்ட்ரூவின் மகள்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி | Princess Beatrice Eugenie Warning As Palace Quiet

ஆக, தாங்கள் எப்படிப்பட்ட ஒரு நபரை பார்க்கச் செல்கிறோம் என்பதும், அது முறையற்றது என்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்னும் ரீதியில் செய்திகள் வெளியாகிவருகின்றன. 

இளவரசர் வில்லியம் அல்ல ஹரி மன்னராகவேண்டும்: இளவரசி டயானா வைத்திருந்த திட்டம்

இளவரசர் வில்லியம் அல்ல ஹரி மன்னராகவேண்டும்: இளவரசி டயானா வைத்திருந்த திட்டம்

மேலும், இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும், எப்ஸ்டீன் அனுப்பிய சிலரை அழைத்துக்கொண்டு, அவர்களுக்கு பக்கிங்காம் அரண்மனையை சுற்றிக் காட்டியதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆக, இந்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் நிலைமை மிக மோசமாக ஆகப்போவதாக அவர்களுக்கு தற்போது எச்சரிக்கை செய்தி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இதற்கிடையில், ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டபோது கூட, இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும் அவர்கள் தங்கள் அலுவல்களை வழக்கம் போல தொடர்வார்கள் என அரண்மனை வட்டாரம் தெரிவித்திருந்தது.

ஆனால், அவர்கள் இருவருடைய பெயர்களும் எப்ஸ்டீன் ஆவணங்களில் இடம் பிடித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளதையடுத்து, கடந்த சில வாரங்களாக ராஜ குடும்பம் அமைதி காக்கிறது.

ஆக, இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும்கூட, தங்களுக்கு முன்போல் அரண்மனையில் ஆதரவு இல்லை என்பதை உணர்ந்திருக்கக்கூடும் என நினைக்கிறேன் என்கிறார் The Telegraph பத்திரிகையின் ராஜ குடும்ப பிரிவு ஆசிரியரான Hannah Furness என்பவர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US