சர்ச்சைக்குரிய நபருடன் புகைப்படம்: பிரித்தானிய இளவரசி ஒருவருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானிய மன்னரான சார்லசின் தம்பியான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, ஒரு மோசமான குற்றவாளியுடன் தொடர்பிலிருந்த விடயம் தெரியவந்ததையடுத்து, அவர் கொஞ்சம் கொஞ்சமாக ராஜகுடும்பத்திலிருந்து ஒதுக்கப்பட்டுவருகிறார்.
இந்நிலையில், அவருடன் இணைந்திருக்கும் புகைப்படம் தொடர்பில் இளவரசி பீட்ரைஸுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
மோசமான சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ
பிரித்தானிய முன்னாள் இளவரசரான ஆண்ட்ரூ, ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கியவரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருடன் தொடர்பிலிருந்த விடயம் தெரியவந்தததைத் தொடர்ந்து ராஜகுடும்பம் பெரும் தலைகுனிவை சந்தித்தது.

அதைத் தொடர்ந்து, ஆண்ட்ரூவின் மனைவியான சாரா ஃபெர்குசனும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்ததால் பெரும் சர்ச்சை உருவானது.
இந்நிலையில், ஆண்ட்ரூ சாரா தம்பதியரின் மகள்களான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியும் தங்கள் பெற்றோருடன் தொடர்பிலிருந்தால் அவர்களுக்கும் சிக்கல் உருவாகலாம் என்னும் ரீதியில் செய்திகள் வெளியாகத் துவங்கின.
அதைத் தொடர்ந்து பொது இடங்களில் தங்கள் பெற்றோருடன் நடமாடுவதை பீட்ரைஸும் யூஜீனியும் தவிர்த்துவந்தார்கள்.

ஆனால், சமீபத்தில் இளவரசி பீட்ரைஸ் தன் நான்கு வயது மகளான Sienna Mopelli Mozziயுடனும், தன் தந்தை ஆண்ட்ரூவுடனும் குதிரையில் சவாரி செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஆகவே, தன் தந்தை என்ற முறையில் ஆண்ட்ரூவுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காக பீட்ரைஸ் அவருடன் நடமாடினாலும், அது பீட்ரைஸின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளார் ராஜகுடும்ப விமர்சகரான Afua Hagan.

பீட்ரைஸ் தனிப்பட்ட முறையில், ஒரு தனி எஸ்டேட்டில்தான் ஆண்ட்ரூவுடன் பயணம் செய்தார் என்பது உண்மைதான்.
ஆனால், அது குறித்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஆகவே அது நல்லதற்கல்ல என்றும் கூறியுள்ளார் Afua Hagan.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |