மூன்று பிள்ளைகளை சமாளிக்கும் இளவரசி கேத்தரினுடைய பிட்னஸ் இரகசியம்...
எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படும் கேத்தரின் என்ன சாப்பிடுகிறார்?
இளவரசிக்கு, தன் குடும்பத்துக்குத் தன் கையால் சமைத்துப்போடுவது மிகவும் பிடிக்குமாம்.
பிரித்தானியாவின் வருங்கால ராணியும், வேல்ஸ் இளவரசியுமான கேட் என்னும் கேத்தரினுக்கு 40 வயதாகிறது என்று சொன்னால், அவரைப் பார்க்கிற யாரும் அதை நம்பமாட்டார்கள்.
மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகிய இளவரசி கேத்தரின், ஆவர்கள் மூன்று பேரையும் கவனித்து பள்ளிக்கு அனுப்புவதுடன், தனது ராஜகுடும்பப் பணிகளையும் செவ்வனே செய்துவருகிறார்.
எப்போதும் வாய் நிறைய புன்னகையுடனும், சுறுசுறுப்பாகவும் காணப்படும் கேத்தரின் என்ன சாப்பிடுகிறார்?
காலையில் porridge, அதாவது நாம் சாப்பிடும் கேழ்வரகுக் கூழ் போன்ற ஒரு உணவு.

Image: Getty Images
இளவரசியின் மதிய உணவில், ஆரோக்கியத்தைக் கொடுக்கும் கீரைவகைகள், பழங்கள் நிச்சயம் இருக்கும். தர்பூசனி, அவக்கேடோ, வெங்காயம், வெள்ளரிக்காய் மற்றும் feta cheese என்னும் பாலாடைக்கட்டி கலந்த ஒரு சாலடை உண்ணுவாராம் அவர்.
இரவு உணவில் பொறித்த சிக்கனும் இருக்கும். அது இளவரசர் வில்லியமுக்கும் பிடித்த உணவும் கூட.
இளவரசிக்கு, தன் குடும்பத்துக்குத் தன் கையால் சமைத்துப்போடுவது மிகவும் பிடிக்குமாம். பீட்சா, பாஸ்தா மற்றும் கேக் செய்துகொடுப்பாராம் அவர்.

Image: Getty Images
ராஜகுடும்பத்தினர் வெளிநாடு செல்லும்போது, கடல் உணவை சாப்பிடக்கூடாது என்பது விதியாம். ஆகவே, வீட்டிலிருக்கும்போது ஜப்பான் உணவான சூஷி, சஷிமி ஆகிய உணவுகளை, தானே தயாரிப்பாராம் கேத்தரின்.
இதுபோக, உணவுவேளைக்கு இடையே, பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள் சாப்பிடும் இளவரசி கேத்தரினுக்கு பாப்கார்ன் மிகவும் பிடிக்குமாம்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        